உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 காவை வியாபார நோக்கோடுதான் நடத்தவேண்டி யிருக்கிறது என விமர்சனம் செய்யும். பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டுகிற ஒரு வகை மீனுண்டு. அதன் பெயர் விலாங்கு மீன். அந்த விலாங்கு மீன் நிலையில் தான் அரசாங்கம் தபால் ஊழியர்களையும், பொதுமக்களையும் மாறிமாறி ஏமாற்றி வருகிறது. பாம்பும், மீனும் ஏக காலத்தில் விலாங்கு மீனைச் சந்தித்து விட்டால் அந்த வேஷம் வெளிச்சமாகி விடும். அதுபோலவே தபால் தந்தி ஊ ஊழியர்களும், பொதுமக்களும் ஒருசேர அரசாங்கத் தின் நடிப்பைக் கண்டுவிட்டால் உண்மை புலனாகி விடும். அப்படி இருவரும் ஒன்று சேருவதற்கான சூழ்நிலை அமைவதற்கு எங்கள் உதவி தேவைப்படு மென்று கருதித்தான் போலும் என்னைப் போன்றவர் களை இங்கே அழைக்கிறீர்கள். நான் ஒரு உறுதி கூறுவேன். உங்களுக்கும், பொதுமக்களுக்குமிடையே நாங்கள் பாலமாக இருந்து இருவரையும் ஒன்று சேர்க்க எங்களால் ஆன பணிபுரியத் தயாராயிருக்கிறோம். முப்பது கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்று பாராள்வோரிடம் நீட்டப்பட்டு, அது குப்பைக் கூடையிலே, உறங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நானறிவேன். உங்கள் கோரிக்கைகள் மட்டுமல்ல இந்த நாட்டில் எத்தனையோ வேண்டுகோள்கள் டில்லி மாநகரத்தின் பெரிய குப்பைக் கூடையிலே கேட்பாரற்றுத் தூங்கிக்கொண்டுதானிருக்கின்றன. சில ஆண்டுகளில் “குப்பைக் கூடை" என்ற பெயர் தூங்கிக்கொண்டுதானிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/167&oldid=1703716" இலிருந்து மீள்விக்கப்பட்டது