உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மாற்றப்பட்டு அவைகள் "கோரிக்கைக் கூடை என்று கூட அழைக்கப்படலாம். க - " வாழ்க்கைப் புள்ளி 150 என்று இருந்தபோது முதல் சம்பளக் கமிஷன் வகுத்த சிபாரிசுகளை ஓரளவு ஏற்று உங்களுக்கு ஊதியம் அளவிடப்பட்டது. இப் போதோ, 150 ஆக இருந்த வாழ்க்கைப் புள்ளி, விலை வாசி உயர்வுகளால் - வேறு பல சூழ்நிலைகளால் 400 என்று ஆகிவிட்டது. வாழ்க்கைப் புள்ளி 400 என்றாகிவிட்டபோதிலும், முதல் சம்பளக் கமிஷன் சிபாரிசுப்படியே நடப்பது உசிதமல்ல. இரண்டாவது சம்பளக் கமிஷன் ஒன்றை அமைத்திட வேண்டு மென்பதே அந்த முப்பது கோரிக்கைப் பட்டியலில் முதன்மையானது என்றும் நான் உணர்கிறேன். இந்தக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதும், நேருவைப் பேட்டி காண வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றிருக்கிறீர்கள். பகவத் சந்நிதானம் பூட்டியிருக்கிறது என்றே டில்லி நந்திகள் தாக்கல் கொடுத்துவிட்டன. அய்யோ பாவம்! பஞ்சாப் மொழி வெறிக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பண்டாரங்களின் தலைவர் ஏதோ ஒரு பத்திரிகையில் எழுதிய திறந்த மடலுக்குப் பதில் மடலாகத் தனி மடல் எழுதிய தயாபரராம் பண்டித நேரு பெருமான், பாடுபடும் நாடி நரம்புகளாம் உங்களது முகத்தைப் பார்க்கவும் இயலாது எனக் கூறி பறந்துவிட்டார்—வெளி நாடு! இதற்குமேல் என்ன? வேலை நிறுத்தம் செய்யலாமா என யோசனை கேட்டு, அதற்கான ஆதரவைப் பெரு வாரியாகப் பெற்று வருகிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/168&oldid=1703717" இலிருந்து மீள்விக்கப்பட்டது