உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையோர்: ஆ! கண்: இன்னும் சந்தேகமா ? இதோ என் னுடைய மற்றெரு சிலம்பு! (உடைக்கிறாள், ஆவேசமாக...மாணிக்கப் பரல்கள் சிந்துகின்றன,] கண் 1 என்ன சொல்லுகிறாய் பாண்டியா, இ போது? அமைச்சர்களே! அறங் கூறும் சான்றோர்களே ! இதற்கென்ன பதில்? தலை தொங்கி விட்டதா ? நெடுஞ்செழிய பாண்டியனின் அறம்...மறம்... திறன்... அத் தனையும் மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டதா? அய்யோ, ஏனிந்த வாட்டம்? தமிழகம் சிரிக்கின்றது பாண்டியா ; நீ தலை குனிந்து நிற்பதைப் பார்த்து ! தமிழ் நாட்டு மறைநூல் திருக்குறள் கேலி புரிகிறது பாண்டியா; உன் நீதி வளைந்த செய்தி கேட்டு ! ஆனை, சேனை ஆயிரமாயிரம் எதிர்த்து வந்தாலும் அண்ணாந்து தலைகுனியாமல் படை நடத்தும் உன் வீரமெங்கே? கம்பீரமெங்கே? மான வெற்றித் திருப்பார்வை எங்கே? எல்லாம் பாழ்! எல்லாமே பாழ்! பாழ்! மெல்லாம் போன பின்பு உனக்கு மாட மாளிகை...மணி மண்டபம் ஒரு கேடா? மாணிக்கமிழைத்த அரியாசனம் ஒரு கேடா? மாசு படரவும் மாநிலம் இகழவும் நீதி வழங்கிய உனக்குச் செங்கோல் எதற்காக? வெண்குடை எதற்காக? வேற்படை... வாட்படை... வேழப்படை எதற்காக? வீணனே! வீரர் குலத்துக்கு இழிவு கற்பிக்க வந்த வனே! இமிழ் கடல் வேலித் தமிழக மெங்கும் நீங்காமல் நிறைந்திருந்த நீதிதனை நொடிப் பொழுதில் அழித்துவிட்ட பாதகனே! அழு! அழு! நன்றாக அழு! என்னைக் கால மெல்லாம் அழவைத்த காவலனே; நன்றாக அழு! என்றன் காதலனைக் - கண்ணாளனைக் கண் நிறைந்த மணவாளனைத் துடிக்கத் துடிக்கக் கொன்று விட்ட பாவி; அழு! அழு அழு! பாண்டி: கண்ணகி! உண் கணவன் கள்வனல்ல! ஆராயாமல் அவசரத்தில் "கொண்டு வருக அவனை!" என்பதற்குப் பதில்... "கொன்று வருக அவனை" என்று ஆணையிட்ட நானே கள்வன்! நானே கள்வன்! தமிழே! தாயகமே! என் தாயே! என்னை மன்னித்து விடு! மன்னித்து விடு! [அடியற்ற மரமென விழுந்து சாகிறான்... கோப்பெருந் தேவியும் அவனைத் தழுவி] கோப்: அரசே! அரசே!! அரசே!!! (என அவன் மீது உயிர் விடுகிறாள்) கண்: அழியட்டும்! வீழ்ந்து ஒழியட்டும்!! நீதி தவறிய பாண்டியா! உன் களங்கத்தைக் கழுவக் கூடிய சாதனம் சாவு ஒன்றுதான்! சாவு ஒன்றுதான்!! அழியட்டும்! ஒழியட்டும்!! என் கணவன் சாவைத் தடுக்க முடியாத மதுராபுரியே, அடியோடு அழியட்டும்! மாளிகைகள் மண்மேடுகளாகட்டும்! பூமி பிளக்கட்டும்! புழுதி பறக்கட்டும்! நெருப்பு பரவட்டும்! நியாயத்தின் பிழம்பு தெரியட்டும்! பயங்கரச் சிரிப்பு... நகரெங்கும் தீ கேட் கிறது! நகரில் தீ பரவுகிறது! தெருவில் மக்கள் ஒட்டம்]