உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்போது நீதிபதிகள்! அவர்கள் உரைக் அமைச்: பெண்ணே! தேவி அணிந்திருப்பதில் வளைக்காமல் கட்டும் - நல்ல தீர்ப்பு1 ஆன்றோர்களே! அறிவு மிகுந்த சான்றோர்களே! அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படைகொண்டவன் பாண் டியன் என்பதற்காக நீதியின் பாதையை ஆரியப்படை கட ந்தான்... அவனி யெல்லாம் புகழ்பெற்றான்... என்ற கீர்த்தித் திரையால் அவன் செய்த குற் றத்தை மறைத்து விடாமல்... தாய்மேல் ஆணையாகத் - தமிழ்மேல் ஆணையாகத்-தாய கத்து மக்கள்மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்! தீர்ப்புக் கூறுவீர்! கோப்பெருந் தேவியின் சிலம்பைக் கோவ லன் திருடினார் என்பது குற்றச்சாட்டு! அதற்கு மரண தண்டனை! அது ஆரா யாமல் அளித்த தீர்ப்பு... அதற்கு மன்னன் பொறுப்பு... என்பது என்னுடைய வழக்கு! அமைச்: வழக்கிற்கு ஆதாரம்? கண்: இதோ, இந்தச் சிலம்பு 1 இதற்கு இணை யான மற்றொரு சிலம்பைத்தான் என் மண வாளர் விற்க வந்தார்... மாபாவிகள் அவ ரைக் கொன்று குவித்து விட்டார்கள்! பாண்டி: அப்படியானால் தேவி அணிந்திருக் கும் சிலம்பு...? கண் : அவைகளில் ஒன்று என்னுடையது... அதற்கு அடையாளம் வேண்டுமா? ஆயிரம் கேள்வி எனைக் கேட்டு உன்னைக் குற்றமற்ற வனாய் ஆக்கிக்கொள்ளத் துடிக்கிறாயே; நீதி மன்றத்தின் தூய்மையை அழித்த பாண்டி யனே !... இப்படி ஒரு கேள்வி நேருக்கு நேர் என் அத்தானைக் கேட்டிருந்தால், நீதி வழுவா நெடுஞ்செழியன் என்ற பெயர் உனக்கு நிலைபெற்றிருக்கும்! என் அத்தான் உயிரும் தங்கியிருக்கும்! ஒரு சிலம்பு உன்னுடையது என்பதை மெய்ப் பித்துக் காட்டுவாயா? கண்: மெய்ப்பித்து என்ன பயன்? இறந்த என் கணவரை எழுப்பித் தருவீர்களா? வெட்டுண்ட தலைதனை ஒட்டித் தருவீரோ? முடியாது உங்களால்...முடியாது உங்களால்! ஆனால் ஒன்று...உயிர் போனதால் தொங்கி விட்ட என் அத்தானின் தலைபோல உங்கள் தலைகளையும் தொங்க வைக்கிறேன்... உங்கள் மானம் போனதால்... உங்கள் நேர்மை போனதால்... உங்கள் நீதி அழிந்ததால்... இதோ, உங்கள் தலைகளையும் தரைநோக்கித் தொங்க வைக்கிறேன்... மதுரைப் பாண்டியா ! உனது மனைவியின் பழைய சிலம்பிலே உள்ள பரல்கள் முத்துக் களா மாணிக்கங்களா? பாண் டி: முத்துக்கள் ! கள்! கொற்கை முத்துக் கண்: என் சிலம்பிலே உள்ளவை மாணிக்கப் பரல்கள்! பாண்டி எங்கே பார்க்கலாம்... தேவி! கொடு இப்படி! [அரசி சிலம்புகளைத் தருகிறாள்] பாண்டி: [கீழே ஆத்திரமாக வீசி உடைத்த வாறு] இதோ பார்... [முதற் சிலம்பு - முத்துப் பரல்கள் தெறிக் கின்றன] பாண்டி: இதோ, கோவலன் திருடிய சிலம்பு! (அதையும் உடைக்கிறான்.) [அதில் மாணிக்கப் பரல்கள் சிதறு கின்றன...] பாண்டி: ஆ1 பூம்புகார் அகழ்வாராய்ச்சியில் கண்ட படகுத்துறை