உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மூடி பாண்டி: ஆத்திரத்தில் அறிவுக் கண்ணை விடாதே கண்ணகி! கையும் களவுமாகப் பிடிபட்டான் உன் கணவன்! கள்வனைத் தமிழகத்து நீதி கொல்லாமல் விடாது என்பது உனக்குத் தெரியுமல்லவா? கண் : நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழியப் பாண்டியனே! உன்னுடைய நாட்டில் எதற்குப் பெயர் நீதி? நல்லான் வகுத்ததோ நீதி? அல்ல! அல்ல! வல்லான் வகுத்ததே இங்கு நீதி! அதனால் தான் என் வாழ்வுக் கருவூலத்தைச் சாவுப் படுகுழியில் கொட்டிவிட்டீர்! கொற்றவனே! குடைநிழலில் குஞ்சரம் ஊர்பவனே! கொலு மண்டபத்தில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு, கோயில் மண்டபத்தோடு முடிவானேன்? குற்றம் சாற்றப் பெற்றவரின் மறுப்புகளுக்கு மதிப்புத் தராமல், கொலை வாளின் வேலை அவ்வளவு அவசரமாக நடைபெறுவானேன்? இதற்குப் பெயரா நீதி? இதற்குப் பெயரா நேர்மை? இதற்குப் பெயரா நியாயம்? இதற்குப் பெயரா அரசு? உனக்குப் பெயரா அறங்காக்கும் மன்னன்? பாண்டி: கண்ணகி! உன் கணவன் கையிலே யிருந்தது அரசி கோப்பெருந் தேவியின் சிலம்பு! கண் : இல்லை! கோப்பெருந் தேவியின் சிலம் பில்லை- கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பு! பாண்டி : நம்பமுடியாது என்னால்! கண்: நீ யார் நம்புவதற்கு ? உன்னை யார் நம்பச் சொல்கிறார்கள்? உன் மீது வழக் குரைக்க வந்தவள் நான்! குற்றவாளி நீ ! அதனால் தீர்ப்பளிக்கும் உரிமை உன் கையில் இல்லை! இதோ இதோ இருக்கிறார்கள் - பெருங் கேண்மைப் பெரியோர்கள்! அவர்களே