உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு கட்சியின் தலைவராக, நாடாளுமன்றத்தில் பல ஆண்டு காலம் புகழ் மிக்க பணியினை ஆற்றிய தம்பி வைகோ பயங்கரவாதியா? அவர் செய்த தவறு என்ன? ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டத்தில் பேசியதுதானே ? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்தக் கட்சிதான் பேசவில்லை ? இதே ஜெயலலிதா தீவிரமாகப் பேசியது கிடையாதா? பேட்டியளித்தது கிடையாதா? ல அப்படியிருக்க இவரை மட்டும் ஓராண்டு காலமாக சிறையிலே வைக்கக் காரணம் என்ன ? அ.தி.மு.க. இவருடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தது கிடையாதா? பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை அனைத்து இந்தியாவிலே உள்ள அனைவரும் முழு அளவில் திருப்தியோடு வரவேற்கா விட்டாலும், ஓரளவாவது விமோசனம் கிடைக்காதா என்று நினைக்கின்ற நேரத்தில், அதிலே திருத்தம் கூடக் கொண்டு வரக்கூடாது என்று அறிக்கை விட்டுள்ளவர் தமிழக முதல்அமைச்சர் ஒருவர்தானே? இவரா தாய் உள்ளம் கொண்டவர்! பழிவாங்கும் போக்கிற்கு எல்லையே கிடையாதா? சட்டத்தைக் கொண்டுவருபவர்கள் நல்ல உள்த்தோடு கொண்டு வந்தாலும், அது எப்படிப்பட்டவர்களால் கையாளப் படுகின்றது என்பது தானே முக்கியம். ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியலுக்கான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கிய நாடு இந்தியா. விசாரணை நடந்து முடியும் வரை ஒருவரை சிறையிலே அடைப்பது கூடாது என்கிறது இந்த ஐ.நா. உடன்பாட்டின் 9 (3)வது பிரிவு. ஆனால் பொடா சட்டமோ பிணை தருவதையே மறுக்கிறது. 1985இல் நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட தடா சட்டம்,