உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ல மறியல் அறப்போர் தீர்மான விளக்கம் (5) இதோ ஒரு குதிரை; குழியும் பறிக்கிறது! விழுப்புரம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானம், பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற பழி வாங்கும் பாசிச சட்டங்களைத் திரும்பப்பெறுக என்பதாகும். இதில் பொடா சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், எஸ்மா, டெஸ்மா சட்டங்களைத் திரும்பப் பெறும் பொறுப்பு தமிழகஅரசுக்கும் உரியதாகும். வேடிக்கை என்னவென்றால், மத்திய அரசு பொடா சட்டத்தின் கொடுமைகளைப் புரிந்துகொண்டு, அது மாநில அரசுகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் தெரிந்துகொண்டு அதிலே குறைந்த பட்சம் திருத்தமாவது கொண்டுவருகிறார்கள். ஆனால் கருணைக்குப் பெயர்போன(?) தாய்க்குலம் ஆளுகின்ற தமிழக அரசு பொடா சட்டம் திருத்தப்படுவதையே எதிர்ப்பதுடன்; டெஸ்மா சட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து, தொழிலாளர்களையும், அரசு அலுவலர்களையும் எப்படியெல்லாம் வதைக்கலாம் என்று வழிவகைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது. பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டிற்கு மேலாக தம்பி வைகோ, நண்பர் பழ. நெடுமாறன், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், மற்றும் நண்பர்கள் எல்லாம் பெற்றோர், மனைவி, மக்களைப் பிரிந்து சிறையிலே வாடிக்கொண்டிருக் கின்றார்கள். பயங்கரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தின் பெயரால் இவர்கள் எல்லாம் கைது