உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 30-4-1982ஆம் ஆண்டிலேயே மாநிலங்களவையில் நிதி ஒதுக்கீடு மசோதாவின் மீது கழகத்தின் சார்பில் உரையாற்றிய தம்பி வைகோ, ஒரு "1963 செப்டம்பர் 12ஆம் நாள் மத்திய அரசின் அமைச்சரவை கூடியது. அந்த மந்திரி சபைக் கூட்டத்திலேயே சேது சமுத்திரத் திட்டத்தை அனுமதித்து துரித நடவடிக்கைக்குரிய பட்டியலில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவிற்கேற்ப திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவானதோர் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு மேல்மட்டக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு திட்டவட்டமான அறிக்கையையும், மதிப்பீட்டையும் 1968ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. 1968ஆம் ஆண்டில் சேது சமுத்திரத் திட்ட வேலையை தொடங்க வேண்டிய மத்திய அரசு ஏன் தொடங்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய மர்மமாகும் என்றார். இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பயன்களை யெண்ணி இதனைத் தொடர்ந்து விரைவுபடுத்தி முடித்துத்தர வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி நாம் மறியல் அறப்போர் நடத்துவதை தமிழக மக்களுக்கு விளக்கிட வேண்டுகிறேன். காவிரியில் குழப்பங்களும் - சேது சமுத்திரத் திட்டத்தில் காலதாமதமும் பிரச்சினைகள் ஆகிவிட்டன. வை நடந்தவைகள்! இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும்! “முரசொலி’” 28.10.2003 அன்புள்ள, மு.க.