உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 4. இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, இராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும். 5. பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் வளர்ச்சி பெறும். 6. மீன்பிடித் தொழில் தென்னிந்தியாவில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும். 7. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், வற்றல், பருத்தி போன்ற பொருட்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும். நான் முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டத்தை வலியுறுத்தி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதி யிருக்கிறேன். இறுதியாக 8-5-2002 அன்று பிரதமருக்கு திரும்பவும் கடிதம் எழுதினேன். அதன் பிறகு, மத்திய அரசு 200 கோடி ரூபாய் அந்தத் திட்டத்திற்காக செலவு செய்ய அனுமதி அளித்திருப்பதாக செய்தி வந்தது. தி.மு.க. சார்பில் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக மத்திய அரசில் திரு. டி.ஜி. வெங்கட்ராமன் இருந்தபோது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆய்வுகள் நடத்தி திட்டத்திற்கான மதிப்பீடுகள் செய்தார்.