உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் அவர்கள் வர்ணனையிலே வல்லவர்தான் என்று சொன்னாலும் கூட, அளவறிந்து வர்ணித்திருக்கிறார். எந்த இடத்திலும் கதையின வேகம் தட்டுப்படாமல், உணர்ந்த வேண்டிய குறிப்பு மங்கிப் போகாமல் சூழ் நிலைகள் மாறிப் போகாமல், சூழ்நிலைகளை எது வரையில் உணர்த்த வேண்டுமோ, அதுவரையிலே உணர்த்தி இந்தப் புதினத்தை உருவாக்கி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் இருநூறு ஆண்டுக் காலத்துக்கு முன்னால் இரண்டாண்டு காலக் காட்சிகளை, "தென்பாண்டிச் சிங்கம்" மூலமாக உருவாக்கி இருக்கிறார் என்று மட்டும் நான் உணரவில்லை. வெள்ளைக்காரனுடைய ஆதிபத்தியம் தென்னாட்டில் வளர்ந்த கால கட்டத்தில், தமிழ் மக்களுடைய உள்ளத்திலே எல்லாம் ஏற்பட்டிருக்கக் கூடிய உணர்வுகளைப் பிரதி பலிக்கக்கூடிய ஒரு புதினமாக இது விளங்குகின்றது. வாளுக்குவேலியைப் போல, அதற்கு முன்னாலே கட்டபொம்மனைப்போல, அதற்கு முன்னாலேயும் தமிழ்நாட்டு மக்களிலே வீரம் உள்ளவர்கள்-படைத் தலைவர்களாக இருந்தவர்கள் - சிறு சிறு நாட்டுக்கு மன்னர்களாக இருந்தவர்கள் -எப்படிப்பட்ட உணர்வுகளைப் பெற்றிருந்தார்கள் என்ற ஒரு நூற்றாண்டுகாலத்துத் தமிழ் நாட்டு மக்களுடைய எண்ண ஓட்டத்தைச் சித்தரித்துக் காட்டுகிறது.