உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27595 4420187 நிமிர்ந்த நடை-நேர்கொண்ட பார்வை- உதடுகளுக்கு மேலே உறைவிட்டெழுந்த வாள் இரண்டைப் பதித்தது போல மீசை -கம்பீரத்தைக் காட்டும் விழிகள் அவற்றில் கருணையின் சாயலையும் அன்பின் பொழிவையும் கூடக் காண முடியும். நீண்டுயர்ந்து வளைந்த மகுடத் தலைப்பாகை நெடிய காதுகளில் தங்க வளையங்கள்-விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்க மணிச்சரங்கள்- இரும்புத்தூண் அனைய கால்களிலும் எஃகுக் குண்டனைய புஜங்களிலும் காப்புகள்-கையிலே ஈட்டி- இத்தனைச் சிறப்புகளையும் சிலை வடிவிலே "கத்தப்பட்டு" என்னும் கிராமத்தில் இன்றைக்கும் காட்சி தருகிற தென்பாண்டிச் சிங்கமாம் 'வாளுக்கு வேலி" யிடத்தே காணலாம். வாளுக்கு வேலி! வீரம் துள்ளுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர்! பாகனேரி நாட்டுக்குத் தலைவன். பாகனேரி என்பது ஒரு நாடா? இப்படிக் கேட்டிடத் தோன்றும். தமிழகத்தில் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு போன்ற நாடுகள் உண்டு; பாகனேரி நாடு எனக் கேள்வியுற்றதில்லையே என்ற வியப்புப் பவருக்கு ஏற்படுவது இயல்பு/ கல்வெட்டுகளை ஆராயும் பொழுது நாட்டின் பிரிவுகளைப் பற்றிய பல விளக்கங்கள் கிடைக்கின்றன.