உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கலைஞர் மு. கருணாநிதி உன் கணவன் உறங்காப்புலி சொல்லும் காரணத்தை மறுக்கிறாயா? ஏற்றுக் கொள்கிறாயா?" என வினவினான். "அவருக்கு எல்லாம் வேடிக்கைதான்! எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் நமது பட்ட மங்கலத்து விநாயகர் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதற்குச் சரியான காரணமிருக்கிறது! அதாவது இந்த வருடம் என் அண்ணனுக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது." வீரம்மாளின் முகத்தில் தனிக் களை கட்டியது. வீரம்மா! உனக்கு எத்தனை முறைதான் சொல்வது? 'எனக்குத் திருமணமாகி ஒரு வாரிசு பிறந்து விட்டால் இதோ என் அருமைத் தம்பி வைரமுத்தன் பட்டமங்கலத்து அம்பலக்காரப் பதவியேற்கும் வாய்ப்பே இல்லாமற் போய்விடுமல்லவா? அதனால் தான் திருமணமே செய்துகொள்வதில்லையென்று சூளுரை மேற்கொண்டுள்ளேன். அதனால் இனியொரு முறை அந்தப் பேச்சைத் தொடங்காதே!" வல்லத்தரையனின் சகோதர பாசத்தை உணர்ந்து உருகிவிட்ட வைரமுத்தன் அண்ணனின் எண்ணத்தை மறுப்பது போலப் பதறித் துடித்து "அண்ணா" என்று குறுக்கிட்டான். "தம்பீ! அது முடிந்த முடிவு! இந்த விஷயத்தில் என்னை இந்த விநாயகரே கூட மாற்ற முடியாது." சகோதரனின் அன்புப் பிரவாகம் கண்டு கண்கள் குளமாக வைரமுத்தன், வல்லத்தரையனின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அண்ணன் தம்பிகள் என்றால் இப்படியிருக்க வேண்டுமென்று ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசியவாறு ஊரார் ஊரார் கலைந்து சென்றவாறு இருந்தனர்.