உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 165 பார்த்திபனூரில் வெள்ளையர்கள் பட்டபாடு! அடடா! அந்த வெல்ஷ் துரையே வெலவெலத்துப் போய், தனது படைகளோடு பின்வாங்கி விட்டான் அண்ணா" "பின் வாங்குவது ஆங்கிலேயர்களுக்குக் கைவந்த கலை! அதையே போர்த் தந்திரம் என்பார்கள்! பார்த்திபனூரில் இருந்து இப்போது அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள்! "அவர்களது அடுத்த திட்டம் தெரியவில்லை! பரமக்குடியை நோக்கிப் பரங்கியர் படை ஒன்று போகிறதாம்! கர்னல் அக்னியூ, ராமனாதபுரம் வட பகுதிக்குச் சென்று அங்கே நமது வீரர்களின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல் மிகவும் தத்தளித்துப் போய் மதுரைக்குச் சென்றுவிடத் தீர்மானித்திருக்கிறானாம்!" அக்னியூ! அவன் சாதாரண ஆள் அல்ல ஆதப்பா! மகா விஷமக்காரன்! சூழ்ச்சிச் சுரங்கம்| அவனது சூது வலைகளை அறுத்தெறிவது என்பது எளிதான செய லல்ல! என் செய்வது! நம்மவர்களே பலர் அவனுக்கும் அவனது ஆதிக்கத்திற்கும் நாமாவளி பாடிக் கொண்டிருக் கிறார்களே!" "பார்த்திபனூரில் மருது பாண்டியரின் வீரர்கள் பெற்ற வெற்றி தொடருமேயானால் பரங்கியரை ஒழித்துக் கட்டுவது நிச்சயம் அண்ணா, நிச்சயம்!" இறுதி வெற்றி நமக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கு இன்னும் ஏற்படவில்லை! அதற்காக விடுதலைப் போரில் ஈடுபட்டுள்ள மருது பாண்டியர் போன்ற தளபதிகளுக்கும், கோபால நாயக்கர் போன்ற பாளையத்து மன்னர்களுக்கும், நாம் கொடுத்து வரும் ஆதரவை நிறுத்திவிடப் போறதில்லை! ஆதப்பா ஒரு சந்தேகம் எனக்கு!'