உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கலைஞர் மு. கருணாநிதி "அண்ணா! வைகைக் கரையோரமாகத்தான் வெள்ளைப் படை வருகிறது என்று முன்கூட்டி மருதுப் படைகளுக்குத் தெரிந்துவிட்ட காரணத்தால் அவர்களை மடக்குவது மிகச் சுலபமாகிவிட்டது விருப்பாட்சி ஜல்லிப்பட்டிப் பாளையக்காரர் கோபால நாயக்கரின் தளபதியைச் சந்தித்து கர்னல் அக்னியூவின் கடிதத்திலுள்ள ஆங்கிலேயர்கள் வகுத்திருந்த யுத்த ரகசியங்களைச் சொன்னேன். அவர் உடனே அந்தத் தகவலை எல்லாப் பாசறைகளுக்கும் அனுப்பி விட்டார்!" "வைகைக் கரையோரம் காட்டு மார்க்கமாகத் திட்டமிட்டபடி வந்த வெள்ளையர் படையை மானா மதுரையிலிருந்து பார்த்திபனூர் வரையில் நம்ம சின்னாபின்னப்படுத்திச் சிதற அடித்து விட்டார்கள்! பத்துக்கு மேற்பட்ட ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டார்கள்! அது மட்டுமல்ல; நமது மண்ணைக் காட்டிக் கொடுக்க அவர்களோடு சேர்ந்து கொண்டு நம்மவரை எதிர்த்து ஆயுதம் தாங்கிப் போரிடும் துரோகிகளில் சுமார் நூறுபேர் பிணங்களாக்கப்பட்டார்கள்! ஆங்கிலேயர்களில் இருவரையும். துரோகிகளில் ஐவரையும் கொன்ற பெருமை உங்கள் தம்பிக்கு உண்டு!" "சபாஷ்/ ஆதப்பா! சபாஷ்! நாம் நமது நிலைக்கு இப்படி மறைந்திருந்துதான் மருதுப் படைக்கும். நாயக்கர் படைக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும். நாம் வெளிப்படையாக இந்தக் காரியத்தில் இறங்கினால் வெள்ளையர்களின் பயங்கர எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும்.* 'இதைத்தான் கோபால நாயக்கரின் தளபதி கூடச் சொன்னார் என்னிடம்! பாகனேரியும் பட்ட மங்கலமும் மற்றுமுள்ள கள்ளர் நாடுகளும் இப்போது செய்து வருகிற மறைமுக உதவிகளைச் செய்து வந்தாலே போதுமென்றார்!