உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தென்பாண்டிச் சிங்கம் 163 "நல்லா இருக்காங்க! தூங்குறாங்க!" காடையும் கௌதாரியும் மரியாதையுடன் பதில் சொல்லிவிட்டு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டார்கள். ஆதப்பா! வந்து விட்டாயா? ஒன்றும் ஆபத்தில்லையே?" என்று கேட்டுக்கொண்டே வந்த அண்ணனைக் கண்டு ஆதப்பன் மாளிகைக் கூடத்தில் எழுந்து நின்றான். 'வா! அறைக்குப் போய்த் தனியாகப் பேசலாம்!!" என்று தம்பியின் தோளை அணைத்தவாறு அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றான். உறங்காப்புலி கூட இன உணர்ச்சியும் நாட்டுப் பற்றும் கொண்டு, உடனே உன்னிடத்தில் அந்த இரகசிய மடலைக் கொடுத்துவிட்டிருக்கிறானே" “ஆம்! அண்ணா! என்று ஆதப்பன் சொன்னானே தவிர, உறங்காப்புலியின் உண்மை உருவத்தைத் தோலுரித்துக் காட்ட அவன் விரும்பவில்லை. காரணம்; வீரம்மாளிடம் அளித்த வாக்கை நிறைவேற்ற வேண்டு மென்பதிலே அவன் உறுதியாக இருந்தான். 'வல்லத்தரையன், வைரமுத்தன் இவர்களிருவரையும் வளைக்க முடியவில்லையென்று தெரிந்ததும் கர்னல்கள் அக்னியூவும் வெல்லுவும் எப்படியோ இந்த உறங்காப்புலியைத் தமது பைக்குள் போட்டுக் கொண் விட்டார்களே! நல்ல வேளை, அந்த உறங்காப்புலி, பாகனேரிக்கு மாப்பிள்ளையாக வேண்டியவன். இப்போது பட்டமங்கலத்தார் பெயரைக் கெடுக்கப் போய்ச் சேர்ந்திருக்கிறான்! அதிருக்கட்டும். ஆதப்பாடு கர்னல் அக்னியூ, வெல்ஷ் துரைக்கு எழுதிய கடிதத்தை என்ன செய்தாய்? யாரிடம் சேர்த்தாய்? அது ஏதாவது பயன்பட்டதா?"