உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கலைஞர் மு. கருணாநிதி "யார் சொன்னாலும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது! ஆயிரங் காரணங்களை ஆளுக்கு ஆள் அடுக்கிக் கொண்டிருக்கலாம்! ஆனால் என் காதுகளில் அவை விழமாட்டா! பட்டமங்கலத்தில் திருமண விழா-அதற்குப் போகாதே என்றால் அதைக்கூடச் சிந்தித்துப் பார்க்க இடமுண்டு/மானமுள்ள இனம் தமிழ் இனம்: உயிர் நீப்பர் மானம் வரின் என்ற குறள் போற்றும் இனம் அந்த இனப் பண்பாட்டின் இலக்கணமாக, இழந்த மானத்திற்கு ஈடாகத் தன் உயிரையே கொடுத்திருக்கும் அந்தத் தலை தாழாச் சிங்கத்தின் கடைசி முக தரிசனத்தை நான் காணாமல் இருக்க முடியாது! அய்யர் அவர்களே! உங்கள் அபிப்பிராயம் என்ன?"" "வாளுக்குவேலித் தேவரின் கருத்தை நான் அப்படியே எழுத்துக்கு எழுத்து அட்சரம் பிசகாமல் வரவேற்கிறேன்! துக்கம் விசாரிக்கச் செல்வதுதான் நல்லது!" 'நன்றி! நான் இப்போதே புறப்படுகிறேன்! கல்யாணி! கலங்காமல் இரு வாளுக்குவேலி, கூடத்தை விட்டு வெளியேறும் போது, ஒரு குரல் அச்சத்துடன் ஒலித்தது! சென்றவன் தலையை மட்டும் திருப்பிக் கவனித்தான்! 'துணைக்கு நானும் வருகிறேன் அண்ணா"கறுத்த ஆதப்பனின் வேண்டுகோள் அது! "ஏன்? நடந்த குழப்பமெல்லாம் போதாதா? நீ வேறு எதற்காக? நான் மட்டுமே போகிறேன்." வாளுக்குவேலியை வழியனுப்ப வெள்ளை அய்யர் அவனுடன் வெளியே வந்தார். கல்யாணி, 'என்ன நடக்கப் போகிறதோ? என்ன செய்தி வரப் போகிறதோ?' என்ற கவலையழுத்திட அப்படியே அறை வாயிற்படியில் உட்கார்ந்து விட்டாள்.