உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கலைஞர் மு. கருணாநிதி சந்ததியாக ஒரு மகனோ மகளோ இல்லாத நிலையில் வல்லத்தரையன் மாண்டுவிட்டான். அவன் தான் திருமணமே வேண்டாமென்று வெறுத்து விட்ட வனாயிற்றே! அவனது ஆசைப்படி அவனுக்குப் பிறகு வைரமுத்தன் பட்டமங்கலத்து அம்பலக்காரராகப் பொறுப்பேற்றுக் கொண்டான் என்ற செய்திகேட்டு, யார் பூரிப்புக் கொண்டார்களோ இல்லையோ, கல்யாணி நாச்சியாருக்கு எல்லையற்ற பூரிப்பு: நேரில் சென்று வாழ்த்த வேண்டும் போலிருந்தது! அம்பலக்காரர் என்பதற்கு அடையாளமாக அணிவிக்கப்படும் அந்தப் பதக்கத்தை எடுத்துக் கண்ணிலே ஒத்திக் கொண்டு இதழ் அமுதால் அந்தப் பதக்கத்தை தனைத்திட வேண்டுமெனவும் துடித்தாள். கௌதாரீ' தெரியுமாடி சேதி! அவர் பட்ட மங்கலத்துக்கு அம்பலக்காரராகி விட்டார்!" என்று சமையற்காரியின் கன்னங்களைச் செல்லமாகக் கிள்ளிக் கொஞ்சிக் குதித்தாள்! "எனக்குத்தான் இப்படி நடக்கும்னு முன்னமே தெரியுமே! "என்னடி தெரியும்?" 'அவரு அம்பலக்காரர் ஆனா கல்யாணி நாச்சியார் இப்படிக் குதிப்பாங்கன்னு" "எப்படித் தெரியும்?" "ஏன் தெரியாது? கட்டாணி முத்தம்னு கேள்விப் பட்டிருக்கேன்; நீங்கதான் கட்டாரிக்கே முத்தம் கொடுத்துக்கிட்டீங்களே வண்டிக்குள்ளிருந்த கௌதாரியைப் பற்றிய நினைவில்லாமலே அன்றைக்குத் தன்னை மறந்து கல்யாணி நடந்து கொண்டதை எண்ணி, வெட்கம் துரத்திட அங்கிருந்து ஓடி விட்டாள்!