உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 331 கற்பித்தேன்!...அதன் தொடர் விளைவுகள், துன்பம் நிறைந்தவை; எனக்குத் தெரியும்! நீங்கள் தூய்மையான வீரர்களாக இருந்தால் என் வாளோடு மோதுங்கள் - அல்லது என் தோளோடு மோதுங்கள்! அல்லது முன் போல வேறொரு காளையைக் கொண்டு வாருங்கள்- அடக்கிக் காட்டுகிறேன்; அல்லது உங்களுக்கு அடிமை யாகிறேன்/இருக்கிறதா அப்படி ஒரு வீரம்" ஆதப்பனின் ஆவேசப் பேச்சை நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த வைரமுத்தன், புன்னகை புரிந்தவாறு ஆதப்பனின் தோளில் கைவைத்து-'ஆத்திரம் உண்மைகளை மறைத்துவிடும்" என்றான். தன் தோள்மீது பட்ட வைரமுத்தனின் கையைத் தள்ளிவிட்டு, 'எங்காவது கிடைக்கிற இடத்தில் வீரத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்! அந்தக் கொள்முதல் முடிந்த பிறகு சொல்லியனுப்புங்கள்! உங்களைச் சந்திக்கிறேன், சந்திக்க வேண்டிய இடத்தில்! எனக் கூறியபடி, அங்கே நின்று கொண்டிருந்த குதிரைகளில் ஒன்றில் ஏறி, அதனை ஓங்கி உதைத்து அந்த இடத்தை விட்டுக் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று விட்டான் ஆதப்பன். வைரமுத்தனின் முகம் வெளுத்துப் போய் விட்டது. உன்னால் எல்லாம் கெட்டது!" என்று அலுத்துக் கொண்டே உறங்காப்புலி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். ஆதப்பன் நம்பாவிட்டாலும், கல்யாணி யாவது தனது பேச்சை நிச்சயம் நம்புவாள் என்ற எதிர்பார்ப்புடன் வைரமுத்தன் அரண்மனைக்குத் திரும்பினான்.