உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 கலைஞர் மு. கருணாநிதி இருந்தான். அவனது தங்கை கல்யாணிக்காகச் சுந்தரி செய்திடத் துணிந்த தியாகத்தின் மதிப்பை அவன் கவனிக்காதவனல்ல!ஆனால் அவன் எப்படி அவளை மறப்பது? எப்படி வடிவு வீட்டுக்குப் போவது? இரத்த அழுத்தம் மேலும் கூடிற்று! அந்த வீடு வாசல் எல்லாமே அவனுக்குச் சுற்றியது போலிருந்தது! சுந்தரி அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள். நம்மிடையே அரும்பிய உறவு, வெறும் உடல் கூறுகளின் பசியைத் தணிப்பதற்காக அல்ல! இரண்டு நெஞ்சங்களிடையே ஏற்பட்ட நெருக்கம்! அதனால் தானோ என்னவோ நமக்குள் இதுவரை அந்த உறவுக்கு இடமில்லாமல் போய்விட்டது! ஆனால்; நான் உங்களை என் உயிராக நேசிப்பதையும், என்னை நீங்களும் அப்படியே நேசிப்பதையும் எந்த ஒரு நிகழ்ச்சியும் தடைசெய்து விடாது!..."" என்னை "அப்படியானால் வீட்டுக்குப் போகச் சொல்கிறாய்? வடிவாம்பாள் "அதற்கு என்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்! எல்லா வகையிலும் என்னைக் கவர்ந்த உங்களை இழப்பதற்கு இடம் கொடுத்த என் மன உறுதியைப் புகழ்வதா. சபிப்பதா என்றே தெரியவில்லை உங்களை நான் வடிவாம்பாள் வீட்டுக்குப் போகச் சொல்லவில்லை- கல்யாணி நாச்சியாரின் கண்ணீரைத் துடையுங்கள் என்று மன்றாடுகிறேன்!" 'நீ என்னை இழப்பதற்குச் சம்மதித்து விட்டாய்! ல்லையா சுந்தரி? இந்த வார்த்தைகள் வேல்களாகச் சுந்தரியின் செவிகளில் நுழைந்தன.