உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 கலைஞர் மு. கருணாநிதி வடிவு வீடு தேடிச் செல்லல் - கல்யாணியின் வாழ்வுக்காகத் தனது உயிரான காதலன் வாளுக்கு வேலியையே தியாகம் செய்ய முன்வந்த சுந்தரி-காதலனின் தங்கையைக் காப்பாற்ற நினைத்துத் தன் தங்கை வடிவாம்பாளையே இழந்த அவளது சோகம் இப்படித் திசைமாறிச் சுற்றிவிட்ட நிகழ்ச்சிச் சக்கரங்கள்; இப்போது இரு நாட்டிற்குமிடையே போர் முரசங்களாக ஒலிக்கத் தொடங்கிவிட்டன. . "இதைத்தான் எதிர்பார்த்தேன்! சபாஷ்! பாகனேரியும் பட்டமங்கலமும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் நேரமும் மருது பாண்டியர் படையும் கோபால நாயக்கர் கூட்டமும் எமது படையிடம் வீழ்ச்சி அடையும் நேரமும் ஒன்றாகத்தான் அமையும் என்று எதிர்பார்த்தேன்! அமைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்தேன்! மிகச் சரியாகச் செய்து முடித்துவிட்ட உறங்காப்புலிக்கு எத்தனை சபாஷ் போட்டாலும் போதாது! என்ன வெள்ளை அய்யரே!" என்று சிரித்துக் கொண்டே கர்னல் அக்னியூ உறங்காப்புலியின் முதுகில் தட்டிக் கொடுத்தான். வெள்ளை அய்யர், அக்னியூ துரையிடம் எப்படியாவது தந்திரமாகப் பேசிப் பாகனேரி பட்டமங்கலம் போராட்டத்தைத் தூண்டி விடாமல் செய்துவிட வேண்டுமென்று கருதினார். மருதுபாண்டியர், கோபால நாயக்கர், ஊமைத்துரை ஆகியோர் நடத்தும் போராட்டத்தை மேலும் சில நாட்கள் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருக்கும் பல்வேறு கள்ளர் நாட்டுப் படைகள் அந்தப் போர்க்களத்தை விட்டுத் திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்! பாகனேரியும், பட்டமங்கலமும் ஒன்றோடொன்று போர் தொடுக்கத் தொடங்கி விட்டால், விடுதலை