உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 கலைஞர் மு. கருணாநிதி படுகுழி/ காட்டில் யானை பிடிக்க அமைப்பது போன்ற படுகுழி/ ஆனால் ஒன்று; யானைப் படுகுழியில் யானை சாவதில்லை! நான் அமைக்கச் சொல்லியுள்ள படுகுழியில் ஆள் விழுந்தால் விழுந்ததுதான்-மண் முடி விடும். மரணம் அணைத்துக் கொள்ளும்! வெற்றி வீரன் வைரமுத்தனைக் கத்தப்பட்டுப் படுகுழி விழுங்கிவிடும்! "பழியைப் பாகனேரி மீது போட்டுவிட்டு, பிறகு உங்கள் அடிமை இந்த உறங்காப்புலி அம்பலக்காரப் பட்டத்தைச் சூட்டிக் கொள்கிறான். எப்படி நான் வகுத்துள்ள திட்டம்? 'சபாஷ்! உறங்காப்புலி, சபாஷ்! அருமையான திட்டம்! ஆனல் ஒன்று; அந்தக் கத்தப்பட்டுச் சாலையில் வேறு யாரும் பயணம் செய்ய முடியாதபடி பாதுகாக்க வேண்டுமே; இல்லாவிட்டால் யாராவது போய் விழுந்து தொலைந்து திட்டமே பாழாகிவிடுமே!" கவலைப்படாதீர்கள்! எனக்கு நம்பிக்கையான படை வீரர்களை அந்தப் பாதையில் நிறுத்தி, இது வெற்றிப் பவனி நடைபெறப்போகிற சாலை அந்தப் பவனி முடிகிற வரையில் மற்றப் போக்குவரத்தே கூடாது, என்று திட்டவட்டமாகத் தெரிவிக்குமாறு பணித்து விட்டேன்! படுகுழி தயாராகிக் கொண்டிருக்கிறது. இருவரும் இரகசியப் பேச்சை முடித்துக்கொண்டு பாசறைக்குத் திரும்பி வந்தார்கள். ஆங்கிலேயே அதிகாரி, வெளியில் இருந்தவாறு, விடைபெற்றுக் குதிரையி லேறிப் போய்விட்டான். உள்ளே வந்த உறங்காப்புலி, வீரம்மாளையும் காணாமல் பெட்டியையும் காணாமல் திடுக்கிட்டான். அரை நொடியில் பாசறையை விட்டு வெளியேறி அந்த இருட்டில் அவளைத் தேடிக்கொண்டு புறப்பட்டான் கையில் ஒரு துப்பாக்கியுடன்!