உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அங்கிருந்த மூன்று ஆசிரியர்கள் அனுப்ப முடியாது என்று கூறியதால், அந்த சப்- இன்ஸ்பெக்டர் அந்த மூன்று ஆசிரியர் களையும் கைது செய்து, கையில் விலங்கிட்டு இழுத்துச் சென்று அவர்களைச் சிறைச்சாலையில் அடைத்துவிட்டார். பொன்னப்ப நாடார் அவர்களும் சங்கரலிங்கம் அவர் களும் அதைப்பார்த்து விட்டு, பக்தவத்சலத்திடம் கேட்ட நேரத்தில் - அவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்க மறுத்து இருக்கிறார்கள். அப்போதும் மாணவர்கள் கிளர்ச்சி நடை பெற்றது. ஆனால் அதை நாடு தழுவிய இயக்கமாக மாற்று வதுதான் நல்லதல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். நாம் எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுத்து இருக் கிறோம். பேராசிரியர் சீனிவாசனை அடித்த இன்ஸ்பெக்டர்- போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். மாணவர்களின் போராட்டத்தினால் இன்ஸ்பெக்டர் அவர் களுக்கும். பேராசிரியருக்கும் தகராறு. அந்த ன்ஸ் பெக்டர் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக் கிறார். லூர்துநாதன் தண்ணீரில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதித் தகுதியில் ஒருவர் நீதிவிசாரணைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இவ்வளவு நடைபெற்று இருக்கிறது. வந்த நான் திருச்சியில் நடந்த சம்பவம் குறித்து எனக்கு தகவல்களைக் கூறினேன். இன்னு ம் தகவல்களைச் சேகரியுங் கள் என்று ஹாண்டே அவர்கள் சொன்னார்கள். நிராகரித்தேனா : புறக்கணித்தேனா ? நீங்கள் யார் சொல்ல. நான் யார் கேட்க? என்று சொன்னேனா ; பல பேர் தகவல் கள் கூறினார்கள். அமைச்சர் மாதவன் மூலமாக பிரின்சி பாலுடன் தொடர்பு கொண்டு சில விவரங்களைத் தந்தேன். நீதி விசாரணை வைக்கப்பட்டிருக்கிறது. நீதி விசாரணை வைக்கப்பட்ட பிறகும் இன்று அர்த்தால் நடத்தப்பட்டிருப் பதாக அறிகிறேன். அமைதியாக நடைபெற்று இருக்கிறது. மாண வேலை நேற்று இங்கே ஒரு அறிக்கை, காங்கிரஸ் மாணவர்களால் அல்ல, சுதந்தரா மாணவர்களால் அல்ல, கம்யூனிஸ்ட் வர்களும், அ. தி. மு.க. மாணவர் களும் நம் சேர்ந்து நிறுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள். எல்வாக் கல்லூரிகளிலும் அல்ல. சட்டக்கல்லூரியில் நடைபெற்று இருக் கிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள் 5-6 பேர் பிற்பகலில் குறளகத்தின் உள்ளே சென்று இருக்கிறார்கள். இங்கே எதற்காக வருகிறீர்கள் என்று கேட்டபோது, அங்கே யிருக்கும் கேண்டீனில் நாங்கள் காப்பி சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி உள்ளே நுழைந்து. அங்கே மாட்டப்பட் டிருக்கும் முதலமைச்சர் படம் - என்னுடைய படத்தை உடைத்து நொறுக்கிப்போட்டுவிட்டுப் போய் விட்டார்கள். நான் கேட்கிறேன். நாம் மாணவர்களுக்காகப் பரிந்து பேச வேண்டியது தான். மாணவர்கள் மென்மையாக நடத்தப்