உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பயம் என்ன? நம்முடைய கொள்கைகள் அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்துகிறது. ஆகவே, நம்முடைய கட்சி கால் ஊன்ற முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, கொள்கை ரீதியிலே நம்மோடு வாதிடுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதன் காரண மாகத்தான் லஞ்சம். ஊழல் என்ற வார்த்தைகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஊரிலே பேசுகிறார்கள். குற்றச் சாட்டுகளை ஆங்காங்கு வாரி வீசுகிறார்கள். தங்களுக்கு வெளியிடத் தைரியம் இல்லாமல் பத்திரிகைகளுக்குக் கொடுக்கிறார்கள். பிறரிடம் சொல்லி, நீங்கள் போய்க் கொடுங்கள் என்று கூறுகிறார்கள். கொள்கைப் போரா? நிலச் சீர்திருத்தம் போதாது என்று கொள்கைப் போரா ? தேசிய உடைமைத் தத்துவத்தில் ஓட்டை உடைசல்கள், என்று கொள்கைப் போரா? விதி விலக்கு இன்னும் ரத்து செய்யப்பட வேண்டும் வேகமாக; செய்யப்பட்டிருக் கிற விதிவிலக்குகள் போதாது என்கின்ற கொள்கைப் போராட்டமா? அல்ல. ஆட்சியில் இருக்கிற தி.மு.க. அறிஞர் அண்ணா அவர்கள் 1952-ஆம் ஆண்டில் நடை பெற்ற - சென்னை நகரத்தில் நடைபெற்ற --தி. பொது மகாநாட்டில் சொன்னார்கள் ; மு. .. தமிழகத்தில் உண்மையான கம்யூனிஸ்டு கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்' என்று சொன்னார்கள். அதை இன்றைக்குச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சி. இப்படியே நீடித்தால் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு போய்விடும் என்ற பயத்தின் காரணமாக ஊழல், வஞ்சம் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். மே ல்லாமல் நிர்வாகத்தில் தலையீடுகள் என்று பேசுகிறார்கள். நிர்வாகத்தில் தலையீடு என்ற குற்றச்சாட்டு திரு. பக்தவச் சலம் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படித்தேன்; எனது நினைவுகள்' என்ற புத்தகம் அதிலே அவரது எண்ணத் தைப் பார்த்துக் கொள்ளலாம். 106-வது பக்கம், குறித் கொள்ளலாம். காமராஜின் சிபாரிசுகள்' என். தலைப்பில் சொல்கிறார்கள்: + தலையீடு காமராஜ் பல முறை பல விஷயங்கள் பற்றி என்னிடம் சிபாரிசு செய்திருக்கிறார். அவர் சொல்லும் விஷயம் தகாதது அல்ல' என்று இருந்தாலும் உடனடியாக அதைச் செய்திருக்கிறேன். சாதாரணமாக நான் செய்யாமல் இருந் திருக்கக்கூடியதைக் கூடக் காமராஜர் சொல்கிறார் என்பதற் காசுச் செய்திருக்கிறேன் திரு. பக்தவச்சலம் அவர்கள் எனது நினைவுகள்' என்ற புத்தகத்தில் 'காமராஜர் சிபாரிக கள்' என்ற தலைப்பின் கீழ் எழுதிய வாசகங்கள் இவை. st