உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 110-ம் பக்கத்தில் இன்னொன்று குறிப்பிட்டிருக்கிறார்கள்: ஒரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவரை விட்டுவீடு மாறு ஒரு எம்.எல்.ஏ. சப் இன்ஸ்பெக்டரிடம் கூறியிருக்கி றார். சப் இன்ஸ்பெக்டர் அவ்வாறு செய்ய மறுத்து விட்டார். அதற்குப் பிறகு அவர் மீது ஊழல் புகார் கூறி அவரை மாற்ற வேண்டுமென்று அந்த எம். எல். ஏ. வற்புறுத்தி இருக்கிறார். ஊழல் புகார் வருகிறது என்பது அந்த எம்.எல்.ஏ. காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர் மீது ஊழல் புகார் கூறி அவரை மாற்ற வேண்டும் என்று அந்த எம்.எல். ஏ. வற்புறுத்திக் கூறியிருக்கிறார். t? . அப்போது விவசாய மந்திரியாக இருந்த கக்கன், அந்த சப் இன்ஸ்பெக்டரை வேறு இடத்திற்கு மாற்றுமாறு ஜில்லா சூப்ரண்டிடம் கூறியிருக்கிறார். நான் தஞ்சாவூர் போயிருந்தேன். (நானல்ல; அவர் !). இதை ஜில்லா சூப்ரண்ட் என்னிடம் சொன்னார். நான் அப்போது துறை மந்திரி. அந்த நேர்மையான சப் இன்ஸ்பெக்டரை மா ற்ற வேண்டாம் என்று நான் சூப்ரெண்டிடம் தெரிவித் தேன். உள் திரு. பக்தவச்சலம் 'எனது நினைவுகள்' என்ற புத்தகத் தில் கக்கனை ஜாடையாகக் குறை கூறிய வாசகம் இது. ஆகவே, நிர்வாகத்தில் தலையீடுகள் இருந்திருக்கின்றன. பக்தவத்சலம் அவர்களும் நிர்வாகத்தில் தவறான தலையீடுகள் கூடாது என்பதைத்தான் சொல்லியிருக்கிறார். டாக்டர் எச்.வி. ஹாண்டே : புத்தகத்தில் கூறியிருக் கிறார்கள் என்று சொன்னார்கள். அதே மாதிரி எம். ராமச்சந்திரன் அவர்களும் உங்களைப் பற்றிக் கூறியிருக்கி றார்கள். எது உண்மை. எது உண்மை ல்லை என் சொல்ல முடியாது. மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : நான் பக்தவச் சலம் அவர்களைக் குறை கூறிச் சொல்லவில்லை. பக்தவத்சலம் அவர்கள் கூறியதை நான் எடுத்துக் கொண்ட நோக் கமே தவறான காரியங்களில் நிர்வாகத்தில் தலையீடு கூடாது என்பதுதான். அதைத்தான் பக்தவத்சலம் அவர்களும் அதிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் அதை எடுத்துச் சொன்னேனே அல்லாமல் வேறு இல்லை. மூன்று அணிகள் ஊழல். ஊழல் என்று பேசப்படுகிறது. தலைவர் காமராஜ் அவர்கள் நேற்றையதினம் அறிவித்துவிட்டார். தெளிவாக, திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். ஸ்தா