உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 பனக் காங்கிரஸ், தி.மு.க.வைத் தனியாக நின்று எதிர்க்கும்; எதிர்த்து வெற்றி கொள்ளும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். நான் அன்றைக்குச் சொன்ன அந்த மூன்று அணிகள் தமிழகத்தின் எதிர்காலத்தில் பொதுத் தேர்தலில் ஒன்றை ஒன்று நிச்சயம் சந்திக்கும் என்கின்ற நிலைக்கு நேற்றைய தினம் காமராஜ் அவர்கள் பச்சைக் கொடி காட்டிவிட்டார் என்பதுதான் நான் அதற்குக் கொள்கிற பொருள் ஆகும். காங்கிரஸ் கட்சியின் தலைமை யில் உள்ள அணி ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் உள்ள அணி. தி.மு.க. தலைமையில் உள்ள அதன் தோழமைக் கட்சிகள் அணி, இந்த மூன்று அணிகள்தான். ன்று முன்னேற்றக் கழக ஆட்சியில் இருக்கிற கொள்கைக் கோட் பாடுகளைப் பற்றி விமர்சிக்காமல் காமராஜ்போன்ற பெரும் தலைவர்கள் ஊழல், ஊழல் என்று ஏதோ சொல்லிவிட்டார் களே என்று எண்ணும்போது உள்ளபடியே வருத்தப்படு கிறேன் நான். நாம் சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். காமராஜ் அவர்கள் கன்னியாகுமரித் தொகுதியில் நாடாளு மன்றத்திற்குப் போட்டியிட்டார்கள். சி. சுப்ரமணியம் அவர்கள் சட்டமன்றத்தில் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நிதி அமைச்சராக இருந்த பொழுது. நாம் யாரும் நமக்கு ஆன தேர்தல் கணக்கைச் சபையில் சொன்னால், ஒருவர்கூட எம். எல். ஏ.- ஆக வர முடியாது' என்று திரு. சி. சுப்ரமணியம் அவர்கள் இங்கே ஒத்துக் கொண் டிருக்கிறார்கள், காமராஜருடைய நாடாளுமன்றத் தேர்தலின் செலவுக் கணக்குத் அவர் கொடுத்த கணக்காக இருக்க முடியுமா? இப்படிக் கேட்கிற காரணத்தால் உன் சேதி என்ன என்று கேட்க முடியும். ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டே யிருந்தால் ஊழல் எங்கே இருக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே, நான் அதைச் சூசக மாக விட்டு விடுகிறேன். " காமராஜ் அவர்கள் சமவாழ்வு என்ற புத்தகத்தில் இந்த ஊழல் லஞ்சம் என்பதைப் பற்றி அழகான மணி வாசகங்களைத் தமிழகத்திற்குத் தந்திருக்கிறார்கள். சம் வாழ்வு புத்தகம்-பக்கம் 37. அதில் சொல்லுகிறார் : dr 3 7 லஞ்சத்தை ஒழித்துவிடுவேன் என்று ராஜாஜி கூறுகி றாரே : அவர் என்ன பரசுராமர் அவதாரமா ?"" என்று காமராஜ் கேட்கிறார். பிறகு அவரே- லஞ்சம் இல்லை என்று யார் கூறுகிறார்கள்? அந்தக் காலம் முதல் லஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்போது கொஞ்சம் அதிகமாகி விட்டது. ராஜாஜி ஆண்ட காலத்தில்