அசைக்க சந்தனக்கிண்ணம் தலைவர் பேச ஆரம்பித்தார். புது நிலவு போன்ற மணமகளையும், பூரிப்பு வழிய அமர்ந்திருக்கும் மண மகனையும் பாராட்டினார். பழைமையின் அடிச்சுவடுகள் மறையாமலிருக்கிற அந்தப் பட்டிக்காட்டிலே பகுத் தறிவுச் சுடர் கொளுத்திவைத்த அந்த இளைஞனை இதய பூர்வமாக வாழ்த்தி மகிழ்ந்தார். வாழ்வுக்கு ஒளி தரப் போகும் தன் காதலனைத் தலைவர் பாராட்ட, அது கேட்டு வெட்கத்தோடு அமர்ந்திருக்கும் புதுப் பெண்ணின் நெஞ்சம் இன்ப ஓடையாயிற்று. புரோகித மணம் ஏன் கூடாது? புரட்சித் திருமணம் எப்படி வளர்ந்தது என்பதற்கான விளக்கங்களை வாரி வாரித் தலைவர் இறைத்தார். வந்திருந்த வண்டினங்கள் அந்தத் தீந்தமிழ்த் தேனை உண்டு மகிழ்ந்தன. பொருந்திய மணம் என்றால் என்ன ? திருமணத் திற்குத் தேவையான - தகுதியான வயது என்ன என் பது பற்றியும் விளக்கம் தந்தார். பழைமையும் புதுமையும் மோதிக்கொள்ளக் கூடாது என்று கேலிசெய்தார், ஆதாரங்கள் காட்டி திராவிடம் என்று ஒரு இனம் உண்டு. "தீராவிடம்" என்று இழித்துரைப்பர், தீயோர். தீயோருக்கு தீராவிடம் தான் என்று சான்றுகளை வழங்கினார்.
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/5
Appearance