உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆதரிக்கிறார் தந்துவிட்டு பொதுக்கூட்டத்திலே விழுகிற மாலைகளிலே ரோஜா மலர்கள் இருக்கின்றனவா : இருந்தால் எத்தனை நாளைக்கு காப்பி போடலாம் என்று கணக்குப்போடுவார். நகரச திடீரென ஒருநாள் நகரசபையார் ஆயிரம் பிராமணர் களுக்கு அன்னதானம் என்று அறிவிப்பு விடுவார்கள். " ஆமாம், செய்ய வேண்டியது தான். அந்தணர் மனங் குளிர்ந்தால்தான் ஆண்டவன் மனங் குளிரும்" என்று அதற்கும் வியாக்யானம் தருவார். பிராமண போஜனத்திலே புண்யகோடி ஆற்றிய பணிதான் தலைசிறந்து நிற்கும். வயிறு புடைக்கத் தின்று ஏப்பமிடும் புரோகிதக் கூட்டத்தினரும் நகர சபைத் தலைவரை வாழ்த்துவதைவிட அதிகமாக புண்யகோடியை வாழ்த்துவார்கள். வாழ்த்துவார்கள்.கான் ஒரு நகரசபைத் தலைவர் வெள்ளையப்ப பிள்ளை பெய ருக்கேற்றபடி மிகவும் வெள்ளை இருதயமுள்ளவரா யில்லாவிட்டாலும், அதிகக் கெட்டவரல்ல. நகரத்தின் முன்னேற்றத்திலே சிறிது நாட்டங் கொண்டவர்தான். சிரமங்களை ஏற்று, செல்வக் குவியலிலே பகுதியைக் கரைத்து எப்படியும் நகரசபைத் தலைவராக வந்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டி வெற்றி பெற்றவர். அவருக்கு புண்யகோடியின் மீது பற்றும் பாசமும் உண்டு, புண்யகோடிக்குப் பொதுமக் களிடத்திலே ஏற்பட்டிருக்கிற ஆதரவும் சேர்மன் வெள்ளையப்ப பிள்ளைக்கு அவர்பால் அன்பு உண்டாக்க ஒரு காரணமாயிருந்தது. அதேநேரத்தில் வெள்ளையப்ப ருக்கு வரவேண்டிய புகழையெல்லாம் புண்யகோடி புத்தி கூர்மையுடன் தன் பக்கம் திருப்பிக்கொள்வதை வெள்ளையப்பர் அறிய முடியவில்லை. அறிந்தாலும் அது