30 ஆதரிக்கிறார் பொதுநலத் தொண்டன் என்ற பெயர்மட்டுந்தானா மிச்சம் என்று பெருமூச்சுவிட்டார். நகரசபையில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஏற்பட் டது. வெள்ளையப்பரின் ஆதிக்கம் அறவே ஒழிக்கப் பட்டு, அந்த ஊரில் அட்போது பிரபலமடைந்த மஞ்சள் கட்சி என்ற புதுக் கட்சி பதவி ஏற்றது. அந்தக் கட்சி யின் தலைவரும் - நகரசபைத் தலைவருமாக பதவியேற்றவர் ராஜ நிலையத்தார் என்பவர். அவருக்கும் நமது புண்ய கோடிக்கும் ஒற்றுமை கிடையாது. இவ்வளவு சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது ; அதில் ராஜ நிலையத்தார் ஜெயிக்கப் போகிறார் என்று முன்கூட்டியே தெரிந்திருந் தால், புண்யகோடி அவர் பக்கம் சேர்ந்துகொண்டு பொதுப்பணியாற்றியிருப்பார். இப்போதும் ஒன்றும் முழுகிவிடவில்லை; ஒரு கை பார்ப்போம் என்று வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு புண்யகோடி புறப்பட்டார். புதிய நகரசபைத் தலைவரின் பார்வைக்குத் தனது பழைய விண்ணப்பத்தை அனுப்பிப் பத்தாயிரத்தைக் புதுத் தலைவர் "இதெல்லாம் பழைய கேட்டுக்கொள் கேட்டார். - சமாச்சாரம் வெள்ளையப்பரையே ளும் என்று பதில் எழுதிவிட்டார். அம்மாமி ஆட்டுக்கறியை களவுகொடுத்த கதையாக புண்யகோடி மனதுக்குள்ளேயே புலம்பினார். வெளி யில் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள், 'இனாமாகத் தந்த இடத்துக்கு இவ்வளவு ரூபாய் கேட்கிறானே யென்று !" "கிளர்ச்சி கிளர்ச்சி என்று ஒலி கிளம்பியது. புண்யகோடி உண்டாக்கிய புயல்தான் அது! ஆனால் அந்தப் புயல்களெல்லாம் புஸ்வாணமாகிவிட்டன. புதிய தலைவரை இழித்தும் பழித்தும் பேசிப் பொதுஜன செல்
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/30
Appearance