40 இரகசியம் கருத்துச் செல் கவிஞனே! கலைவாணனே !! வமே! கண்டேன் உமது கவிதையை! விதவைத்துயர் பற்றி வேதனை நிரம்பிய கீதம் அமைத்தீரே; அதுகண்டு விழியிலே நீர் பெருக்கினேன். இத்தகைய பெருமை மிகுந்த உம்முடன் இருந்து பணி செய்ய விழைகிறேன். விருப்பம் நிறைவேறுமோ? விடுத்திடுவாய் பதில். இங்ஙனம் வில்லவன்" இப்படி ஒரு மடல் ! "ஏட்டிலே பாட்டு கண்டேன் ! எழுத்தின் வித்த கனே! என் இதயங் கவர்ந்தவனே! ஏழை நான் ! எனக்கோர் உதவி செய்வாயோ ! கவிதை எழுதுவதில் அடியேன் திறமை யுடையவன். என் கவிதைத் தொகுப்புகளை புத்தகமாக்கும் பணியை மேற்கொள் வீரேல் என் ஆசை நிறைவேறும். உடன் பதில் காத்திருப்பேன். தருவாய்! மொழியான் இப்படி ஒரு முடங்கல் வரும் ! இப்படிக்கு இன் "கடல் மடை திறந்தாற்போல் கருத்து மழை பொழியும் கவிஞர் ஏறே ! கடையேன் கண்ணப்பனின் கண்ணீரைத் துடைப்பீர்! எனக்கு கவிதை எழுத பல நாட்களாய் பேரவா ! அந்த எண்ணத்தை ஈடேற்று வீராக " இப்படி ஒரு கடிதம்! 101"நாடகத்தில் உமது சொற்றிறன் போற்றற் குரியது. கதாநாயகனும் கதாநாயகியும் பாத்திரத்தால் உயர்வு பெற்றதைவிட உமது பாட்டால் அதிகம் மதிப்பு பெற்றனர். உமது பாட்டை இசைக்கும் பெரும்
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/40
Appearance