உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தெருக்கூத்து (UTLC) "நஞ்சை குலுங்கும் தஞ்சையுடனே வஞ்சிகள் கொஞ்சும் - பகைவர் அஞ்சும் - யாரையும் மிஞ்சும் பஞ்சமில்லா பாங்குறு நாட்டின் வெஞ்சமர் வரினும் வீரமோடெதிர்த்திடும் சூரர்கள் நாங்களே ! சோழர்கள் நாங்களே! ஏழடுக்கு மாளிகை மேழிச் செல்வ மேதைகள் ஆழி சூழ்ந்த நாட்டினன் சோழ மன்னன் நானுந்தான் சோபிதமாய் வந்தேனே வந்தேனே வந்தேனே 39 சோழன் இருக்கையில் அமர, வாளை வீசியபடி வரு கிறான் சேரன். (பாட்டு) "வீரம் மலிந்த நாடு தீரம் செறிந்த நாடு பாரில் சிறந்த நாடு போரில் புலிகள் நாடு சேரர் வாழ்ந்திடும் நாடு சிங்காரப் பொன்னாடு திராவிடத்தின் செல்வனாவான் திகழ்சேர செங்குட்டுவன் புகழ்சேரப் போர் முனையில் கனக விசயர்களின் கழுத்தொடியக் கல்லேற்றி