உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 49 கங்கையிலே நீராட்டி கால் கடுக்க நடக்க வைத்து வேல் விடுத்து, வில் எடுத்து - கலை நூல் பல படித்து - கண்ணகிக்கு சிலை வடித்து -வடவர்களின் திமிர் ஒடித்த, வல்லமையாளர் நாமே- வந்தேனே........ வந்தேனே வெற்றித் தமிழ் வேந்தன் வந்தேனே. 44 ........ மூவரும் சேர்ந்து பாடுகிறார்கள்) சேர-சோழ-பாண்டியர் நாம் வாழ வைக்கும் திரு இடத்தை கோழைக் கொள்கை குவியாவண்ணம் ஏழை மக்கள் ஏங்கா வண்ணம் வானில் பறந்திடும் நம் கொடிகள் தாழப் பறந்திடும் நிலைமை வரா வண்ணம் தடுத்திடுவோம் ....... எகிப்து: யவனம் கிரேக்க நாட்டிற்கே ஏற்றுமதி செய்திடுவோம் மயில் மிளகு யானைத் தந்தம் ஒயிலாகக் கொண்டு செல்லுங் கப்பல் ஒட்டிடுவோம் - பகையை வாட்டிடுவோம் மூவரும் பாடி முடிந்ததும், அவையோர் அனை வரும் அனைவரும் ஆனந்த மேலீட்டால் அரசர் பெருந்தகைகாள் நீவீர் வாழ்க வாழ்க