உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தெருக்கூத்து என உரக்கக் கூவுகின்றனர். அப்போது அங்கே ஒரு ஆட்டையும் மாட்டையும் ஓட்டிக்கொண்டு ஒரு முனி வர் நுழைகிறார். முனிவரைக் கண்ட மூவேந்தரும். வணக்கம் வணக்கம் வணக்கம் என மொழிந்து வரவேற்கிறார்கள். முனிவர்: நமஸ்காரமென்று நல்ல மொழி இருக்க ஏனப்பா வணங்கி வணங்கி வளைகிறீர்கள்? சேரன்: வணக்கம், வண்டமிழ்ச் சொல்லன்றோ ? முனிவர்: தீந்தமிழ்தான்! ஆனால் நமஸ்காரம் எத்திக்கும் புகழும் தித்திக்கும் தெய்வீகச் சொல்லன்றோ ! பாண்டியன்: தெய்வீகம் ! (ஆச்சரியமாய்) அது என்ன புது வார்த்தை சோழரே ! சோழன்: யானுமறியேன் தோழரே ! முனிவர்: பாராளும் பைத்தியக்காரர்களே ! தேச பக்தி முற்றி தெய்வ பக்தியற்று தேய்ந்து விட்டீர்கள். இகலோகத்து இன்பத்திலே மிதக்கிறீர்கள், பர லோகமென்று ஒன்றிருப்பதை மறந்துவிட்டீர்கள். சேரன்: பரலோகமா ?.... அப்படியா?... நமது வட நாட்டுப் படை யெடுப்பிலேயுங்கூட அந்த லோகத் தைக் கண்டோமில்லை. முனிவர் : படை வீரன் வேடத்திலே பார்க்க முடியாத லோகமப்பா அது! பக்தர் உடையிலே காண வேண்டும் அந்த திவ்ய லோகத்தை! போர்க் கருவிகள் கூடாது, புனிதமான விபூதி அணிய