உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 செல்ல வேண்டும். விளைவாசி குறைவதற்கும், மத்திய அரசி னுடைய எதேச்சாதிகாரம் வீழ்த்தப்படுவதற்கும், ஆதிக்கம் அகற்றப்படுவதற்கும் நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பிலே அங்கே பேசினார்கள். அதையே சுவரொட்டிகளாகவும் ஒட்டி வைத்திருக்கின்றார்கள். நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்! நான் அவர்களை ஒரு ஆறு, ஏழு மாதத்திற்கு முன்பு இரண்டு கேள் விகளை அவர்கள் முன் வைத்தேன். அதற்கு இதுவரையிலே அவர்கள் பதிலளிக்கவில்லை. தமிழ்நாட்டிலே இந்தியை- இந்தி ஆதிக்கததை-இந்தித் திணிப்பை எதிர்த்தே தீரு வோம் என்று பேசி திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதிலே முனைப் பாக இல்லை என்று எங்கள் இரண்டு கட்சிகளையுமே தாக்கி மேடை தோறும் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு நான் ஒரு நாலைந்து கூட்டங்களிலே ஒரு கேள்வியை எழுப்பினேன். என்ன கேள்வியென்றால், அண்ணா அவர்களுடைய காலத்திலே திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் தமிழ். இந்தி, ஆங்கிலம் இந்த மூன்றும் பள்ளிக்கூடங்களிலே மாண வர்கள் படிக்கவேண்டுமென்று கட்டாயமாக இருந்த நிலையை கலைஞர் அவர்கள் மாற்றி இனிமேல் தமிழ்நாட்டு பள்ளிக் கூடங்களிலே தமிழ், ஆங்கிலம் இரண்டுக்குத்தான் இடம். இந்திக்கு இடமில்லை. இந்தி ஆசிரியர்களுக்கெல்லாம் மாற்று வேலை தரப்படும் என்று அண்ணா அறிவித்து இரு மொழிக் கொள்கையை அண்ணா நம்மிடத்திலே தந்துவிட்டுச் சென்றார். அண்ணா மறைவிற்குப் பிறகு ஏழாண்டுக்காலம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் இன்றைக்கு நடைபெறு கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் அந்த இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது. இனி எவனொருவன் ஆட்சிக்கு வந்தாலும் சரி இந்த இரு மொழிக் கொள்கையிலே எவன் கை வைத்தாலும் மறுநாள் சிம்மாசனம் காலி என்கின்ற அளவிற்கு தமிழ்நாட்டி னுடைய மொழிப் போராட்ட வரலாறு நாற்பதாண்டு கால நெடிய சரித்திரத்தை உள்ளடக்கிய வரலாறு ஆகும். மொழிப்போரில் வரலாறு படைத்தோர் நாங்கள் எனவே அப்படிப்பட்ட வரலாற்றுக்குரியவர்கள் நாம். 1938. -ஆம்ஆண்டிலே இருந்து இந்திமொழி ஆதிக்கத்தை