உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கேட்டது 40 லட்ச ரூபாய்! ஆனால் தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்கள், அந்தத் திட்டத்தின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளித்தார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் 10 இடங்களில் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் கட்டப்பட்டு, அவைகளில் தொழு நோய்ப் பிச்சைக்காரர்கள் -குஷ்டரோகப் பிச்சைக்காரர்கள் அங்கே குடியமர்த்தப்பட்டு. அவர்களுக்கான நற்பணிகள் நடைபெறத் தொடங்கியிருக்கின் றன. மூன்று இல்லங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அதிலே தொழு நோய்ப் பிச்சைக்கா ரர்கள் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள்.மீதமுள்ள ஏழு இல்லங் களும் கட்டிமுடிக்கப்படுமேயானால், தமிழ் நாட்டிலே தொழு நோய்ப் பிடித்த பிச்சைக்காரர்களாக உள்ள 6,000 பேர்களும் வலிவிலே வந்தாலும் வரவேற்போம். வராவிட்டால், அவர்கள் போலீசாரால், சட்டப்படி அந்த இல்லங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடிய கட்டாயத் திட்டத்தைத் தமிழக அரசு மிக விரைவிலே நிறைவேற்ற இருக்கின்றது. ஏழைகளின் அரசு இவைகளுக்கு அரசாங்கத்தினுடைய பணத்தை செல வழிக்காமல், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 5 லட்சம், 10 லட்சம் என்று வசூலிக்கவேண்டுமென எண்ணியிருப்பதற்குக் காரணம், எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள், அவர் கள் 10 ஆயிரத்தையோ, 20 ஆயிரத்தையோ செலவழித்து இப்படிப்பட்ட ஒரு பெரிய முகாமை நடத்திட இயலாது! ஒரு 10 ஆயிர ரூபாய் தரவேண்டும், நல்ல காரியத்திற்குப் பயன்பட வேண்டும் என்று று எண்ணுகின்ற பணக்காரர்கள் பல பேர் இருக்கின்றார்கள். நான் என்னைப் பொறுத்த வரையில் சொல்லிக் கொள்வேன், ஏழை எளிய மக்களுக்காகப் பணக் காரர்களிடத்தில் பணம் பெறுவதில் எந்தவிதமான தவறும் கிடையாது.நான் என்னுடைய கட்சிக்காக எந்தப் பணக்காரரி டமிருந்தும் பணம் வாங்கியது கிடையாது; வாங்கப் போவதும் கிடையாது! கட்சியிலே இருக்கிற பணக்காரர் களிடம் கூட, கட்சிக்காக நான் பணம் வாங்கியது கிடையாது! ஆனால் இந்த நாட்டிலே இருக்கிற ஏழை மக்களுக்காகப் பணக் காரர்களிடம் பணம் பெறுவதில் தவறு இல்லை. அவர்களுடைய பணம் நல்ல காரியங்களுக்காகச் செலவழிக்கப்படவேண்டும் என்ற அந்த நல்ல எண்ணத்தோடுதான், அரசாங்கத்தின் சார் பிலே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறோம். இதுவரை 13 ஆயிரம் பேருக்குத் தமிழ்நாடு முழுவதிலும் இந்தக் கண் சிகிச்சை செய்யப்பட்டு, கண்ணாடிகள் வழங்கப் பட்டு, கண்ணொளி தரப்பட்டிருக்கின்றது.மீதமுள்ளவர்களுக்கு ந்த ஆண்டு முடிவிற்குள்ளாக நிறைவேற்றப்பட இருக்கிறது.