கருணாநிதி ஆச்சாரியார் அவர்களும் தமது சாமர்த்தியங்களை யும், சாணக்கிய தந்திர உபாயங்களையும் உபயோகித்துச் சிலரை காங்கிரசின் எதிர் முகாமிலிருந்து காங்கிரசுக்கு இழுத்து தன் கட்சியை, காங்கிரசைப் பலப்படுத்திக் கொண்டு, காங்கிரஸ் மந்திரி சபையை அமைத்து விட்டார். இவ்விதம் தேர்தலுக்கு நிற்காமல், நியமனம் செய் யப்பட்ட மேல்சபை மெம்பரான ஆச்சாரியார், தாம் தேர்தலுக்கு நிற்க முடியாது என்றும், வயதாகிவிட்டது தான் காரணமென்றும், தமது நியமனத்திற்கு ஒரு நியாயம் கற்பித்துப் பேசுகிறார்! 'எனக்கோ வயதாகிவிட்டது. ஓடியாடித் தேர்தல் பிரச்சாரம் செய்ய, தேர்தல் வேலைகளைக் கவனிக்க என்னால் முடியாது. இல்லாவிடில் நானும் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் தேர்தலுக்கு நின்று வெற்றிபெற முடியும். எனவே எனது நியமனம் (மேல் சபை அங்கத்தினராக)ப் பேசுவதில் பயனில்லை, சரியு மில்லை, என்ற கருத்துப்பட ஆச்சாரியார் பேசியிருக் கிறார்! தனக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிய வில்லை, முடியாது, வயதாகிவிட்டது என்று காரணங் கூறிடும் ஆச்சாரியார், அருப்புக்கோட்டைத் தொகுதிக் குத் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போனது ஏனோ? அங்கங்கே முனிசிபல், கார்ப்பரேஷன் தேர்தல் கூட்டங்களில் கலந்து காங்கிரசுக்காகப் பேசிடும்போது, 3 33
பக்கம்:புராணப்போதை.pdf/34
Appearance