கருணாநிதி சிறு வயதில் வேலை வெட்டி எதுவுமே செய்யாத வனாய், செய்யாதவனாய் மட்டுமல்ல, செய்யவே விரும் பாது ஊர் சுற்றி அலைந்தவன் கிளைவ்! ஊர் வம்பும் ஊர்ச் சண்டையுமே அவனது உலகம்,உற்சாகம், உல்லாச வாழ்வு என்ற நிலையிலே திரிந்துகொண் டிருந்தான். சாக்கடையிலே இறங்குவது, சகதியிலே புரள்வது சலசலப்பும், சந்தடியும் உண்டாக்கிடுவது என்பதே அவனது தினக்கடமை என்று கருதி வந்தானாம் கிளைவ். ஊராரின் நிந்தனையை, உற்றார் உறவினரின் கேலி மொழியைச் சகித்திட முடியாது, அவனது பெற்றோர் பிள்ளையை நினைத்து வேதனைக்குரல் எழுப்பிக்கொண் டிருந்தனர். இந்த நேரத்தில், இந்தியாவில், கிழக்கிந்தியக் கம்பெனி என்ற ஆங்கிலேய வியாபாரக் கம்பெனியில் ஒரு சாதாரண வேலைக்கமர்த்தி கிளைவை இந்தியாவுக்கு அனுப்பினர். இங்கிலாந்தில் அவனது ஆர்ப்பாட்டமும், அவதி யும் தாளமுடியாது தவித்து, தொலைந்தால் போதும் என்று இந்தியாவுக்கு அனுப்பினர். வெளிநாட்டிலாவது அவனது கொட்டம் அடங்காதா, என்ற பேராவலுடன் அவனது குடும்பத்தினர். இந்தியா வந்து சேர்ந்த கிளைவ், இராணுவத்திலே சேர்ந்து இந்தியாவில் இங்கிலாந்தின் பிடி, ஆதிக்கம், 47
பக்கம்:புராணப்போதை.pdf/48
Appearance