1963ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் முரசொலி நாடக மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தீட்டிய மணிமகுடம் நாடகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் ஒத்துழைப்போடு நடத்தினேன். நாடகத்தை நடத்துவதற்கான செலவு போக மீதமான நன்கொடைப் பணம் ரூ. 1700/-இல் பேரறிஞர் அண்ணா அவர்களிடம் ரூ.200/- தேர்தல் நிதியாக வழங்கினேன். ரூ.750/- கே.வி.கே.சாமி நினைவுப் படிப்பகத்திற்கும், ரூ. 750/- எம்.ஜி.ஆர். மன்றத்திற்கும் முரசொலி நாடக மன்றத்திற்கு ஒத்துழைத்த காரணத்தால் பேரறிஞர் அண்ணா அவர்கள் கையால் நிதியாக வழங்கப்பட்டது. அந்த நாடகத்தை இயக்கியதோடு அந்த நாடகத்தில் வரும் பொன்னழகன் என்ற மக்கள் தலைவர் வேடத்தில் நடித்தேன். கலைஞரை அழைத்து என்னால் என் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்த முடியவில்லை. கலைஞரே என் மகனுக்குப் பெயர் சூட்டியதாக நினைத்துக் கொண்டு பொன்னழகன் என்ற பெயரைச் சூட்டினேன். தமிழ் இனத்தின் தலைவர் கலைஞர் அவர்கள் 50 ஆண்டு களுக்கு முன் எழுதிய நாடகத்தை இன்றைய தலைமுறை கழகத் தோழர்கள் எல்லாம் படித்து மகிழும்படியாக கலைஞர் அவர்களின் 87வது பிறந்த நாள் விழாவில் (3.6.2010) இந்நூலை எளிய அன்புப் பரிசாக வழங்குகிறேன். அன்புள்ள குறிஞ்சி சுப்ரமணியன் சென்னை -20 3.6.2010 - க
பக்கம்:மணி மகுடம்.pdf/5
Appearance