உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி மகுடம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 23 காணிக்கை செலுத்துவோர் வரவில்லையே என்று குருநாதர் காத்துக் கிடந்தது உண்மை... ஒரு: குழப்பம் ஏற்பட்டுக் குதிரைப்படை வந்தது மட்டும் பொய்யாக்கும்? க.ரோ: அதுவும் உண்மைதான்! ஆனால் செய்தியில் தான் சிறு மாறுதல், குழப்பம் ஏற்பட்டுக் குதிரைப்படை வரவில்லை. குதிரைப்படை வந்த பிறகே குழப்பம் ஏற்பட்டது! ஒரு: மடாலயத்துக்கு முன்பு ஏனய்யா கூட்டம் போட வேண்டும்! க.ரோ: புண் இருக்குமிடத்தில்தானே மருந்து போட வேண்டும். ஒரு: என்னமோ எனக்கு உன் பேச்சில் நம்பிக்கையில்லை, பத்தரிகையிலே பொய் போடுவானா? க.ரோ: போய்யா! உன்னைப் போல ஆளை நம்பித்தானே அவன் பத்திரிகையே நடத்துகிறான்! அச்சிலே வருவது அவ்வள வும் உண்மை என்கிற ஆஷாடபூதிகள் அதிகமாகிவிட்டதால்தான்... அல்லித் தண்டுலே அனுமார் புகுந்தார் - ஆதிசேஷன் அகிலத்தைச் சுமக்கிறான் - ஆட்டுக் குட்டிப் பாட்டுப் பாடுது - அணிப்பிள்ளை பாலங் கட்டுது - நேற்றுப் பிறந்த குழந்தை கேட்ட வரங் கொடுக்குது - என்றெல்லாம் கயிறு திரித்து விட்டார்கள் - போய்யா... போ! (என்று கூறிவிட்டு கருப்பு ரோஜா அதைவிட்டுப் போகிறான். பத்திரிகை படிப்பவன் (செய்தியைக் கண்டு) அடேடே! சீமான்கள் சபை இன்னைக்கு கூடப் போகுதாமே; வாங்கய்யா நாமும் போகலாம்) காட்சி 6 (சீமான்கள் சபை கூடுகிறது. சீமான்களும் அமைச்சர் குணசீலரும் இருக்கிறார்கள். தனி அழைப்பின் பேரில் குரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_மகுடம்.pdf/32&oldid=1706429" இலிருந்து மீள்விக்கப்பட்டது