24 மணிமகுடம் நாதரும், 'மக்கள் தொண்டன்' ஆசிரியர் அரிஹரநாதரும் அமர்ந்திருக்கிறார்கள். சபையை விட்டு சிறிது தூரத்தில் பொது மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே - பொன்னழகன், புதுமைப் பித்தன், அல்லி முதலியோர் இருக்கிறார்கள்) குணசீலர்: பெருமைக்குரிய சீமான்களே!... மணிமகுட புரியின் பிரதிநிதித்வம் வாய்ந்த இந்த சபை, இன்றைய தினம் செய்ய வேண்டிய தீர்மானங்களிலே மிக முக்கியமானது தேவாலயம் ஒன்று நிர்மாணிப்பதைப் பொறுத்த விஷயமாகும். மணிமகுடபுரியில் உலகம் கண்டு வியக்கக் கூடிய அளவுக்கு ஒரு அதிசயம் இருப்பது நமக்கெல்லாம் பெருமையாகும். அத்தகைய சிரஞ்சீவித் தன்மை வாய்ந்த அதிசயம் நாம் புதிதாகக் கட்ட இருக்கிற தேவாலயமாயிருக்கட்டும். நாம் நினைக்கிற அளவுக்கு பிரம்மாண்டமான முறையிலே ஆலயம் கட்ட - தலைநகரிலே இடவசதி இல்லை. அதைப் பொறுத்து - தலைநகரின் ஒரு பகுதியான கொடிக்கால் நகரை காலி செய்து விட்டு அங்கே கோயிலைக் கட்டலாம் என்று ஒரு யோசனையும் இருக்கிறது. இந்த நமது குருநாதரின் யோசனையாகும் - கொடிக்கால் நகரில் கோயில் எழுப்புவது சம்பந்தமாக அனைவரும் தங்கள் யோசனைகளைக் கூறி தெய்வீகம் பொருந்திய இந்தத் தீர்மானத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டுகிறேன். இதுபற்றி நல்ல யோசனைகள் கூறுவதற்கு பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள். யோசனை பங்காளரான ஏழை (அமைச்சர் அமருகிறார்) சீமான் 1: ஆண்டவனுக்கு ஆலயம் கட்ட யார் ஆக்ஷேபிக்கப் போகிறார்கள் - தாராளமாகச் செய்யலாம். சீமான் 2: யாரையும் யோசனை கேட்கத் தேவையில்லை. குருநாதர் இஷ்டம் போல் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கோயில் அமைக்கலாம்.
பக்கம்:மணி மகுடம்.pdf/33
Appearance