கலைஞர் மு. கருணாநிதி 25 சீமான் 3: ஆலயம் தொழுவது சாலவும் நன்று!- கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். குண: மகேசன் காரியத்திற்கு மறுப்பே இருக்காது என எண்ணுகிறேன். மிகவும் மகிழ்ச்சி (பொன்னழகன் எழுகிறான்) பொன்: கொடிக்கால் நகரத்தில் கோயில் கட்டுவதை நான் எதிர்க்கிறேன். குண: ஏன்... ? ய - பொன்: கொடிக்கால் நகரம் ஏழைகள் பகுதி ஆயிரம் குடிசைகள் அழிக்கப்பட்டு, அங்கே ஆலயம் கட்டுவது அனுமதிக்க முடியாத செயல்! வெற்றிலை பயிரிட்டு வயிறு வளர்க்கும் ஏழைகள் எங்கே போவார்கள்? ஆயிரம் குடும்பங்களின் கதி என்ன? அந்தக் குடிசைகளுக்கு உயிரூட்டும் கொடிக்கால்கள் அழிக்கப்பட்டால் குமுறியெழும் வறுமைத் தீயை அணைப்பதற்கு யாராலும் இயலாது- குழந்தை குட்டிகளோடு ஏழைகள் தவிக்க கொட்டு மேளத்தோடு தேவாலயத்துக் கும்பாபிஷேகம் நடைபெறுவதை மனித இருதயம் படைத்த யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தேவனுக்கு ஒரு ஆலயம் தேவையானால், வேறிடத்தைத் தேர்ந்தெடுங்கள். குடிசை வாழ்வோரின் வயிற்றிலே மண்ணைப் போடாதீர்கள். - குண: இவ்வளவு பெரிய நாட்டிலே அந்த ஆயிரம் குடிசைக்காரர்களும் வசிப்பதற்கா இடமில்லை? பொன்: அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டால்? இவ்வளவு பெரிய தேசத்திலே -தேவனுக்கு ஆலயம் அமைக்கவா வேறு இடமில்லை? என்ன பதில் சபையோர்களே? இதற்கு என்ன பதில்? ஏன் - அந்த ஏழைப் பூச்சிகள் மீது உங்களுக்கு என்ன கோபம்? பருவத்தால் கெட்டாலும், செழிப்பின்றி செத்தாலும், கொடிக்கால் வரி கொடுத்துத்தான் தீரவேண்டுமென்று கட்டாயப்படுத்திப்
பக்கம்:மணி மகுடம்.pdf/34
Appearance