26 மணிமகுடம் பெற்றுக் கொள்கிறீர்கள் வியர்வை கொட்டிப் பயிரிடும் வெற்றிலைக்கு முக்கால் பங்கு வரி செலுத்தி, கால் பங்கு வருமானத்திலே காலத்தை ஓட்டுகிறார்கள். அந்தக் கதியற்றவர்கள் - திடீரென்று திசைமாறி ஓடவேண்டும். அங்கே தேவாலயம் கட்டப் போகிறோம் என்று திடீர் உத்தரவு போடுவது இரக்கமற்ற செய்கை ஆயிரம் குடும்பங்களை ஏக காலத்தில் சாக அடிக்கும் கொலைவெறிக் கொள்கை! தயவு செய்து கொடிக்காலை ஒழித்து கோயில் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டுகிறேன். குண: இதற்கு குருநாதர் அவர்களே பதில் சொல்வார். (குருநாதர் எழுகிறார்) குரு: கொடிக்காலை அழிப்பது கூடாது என்று ஒரு குரல் கேட்கிறது! - கேலிக்குரிய குரல்! கோயில் தேவையில்லை என்று கூறுவதற்கு பயந்து கொண்டு, கொடிக்கால் நகரத்து மக்களை கேடயமாக்கிக் கொண்டு அலறிய கேலிக்குரிய குரல்! இதுபோன்ற நாத்தீகக் கொள்கை பரவி விட்டது என்பதற்காகத்தான் ஆலயம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்கிறேன் நான்! ஆயிரம் குடிசைகள் அழிந்து விடுமாம் - ஒரு ஆத்மா அங்கலாய்க்கிறது அதற்காக! அழியட்டுமே! ஒரு ஆலயம் கட்டுவதால் ஆயிரம் குடிசைகள் அழியலாம் - அதே நேரத்தில் மணிமகுட புரியின் லட்சோப லட்சம் மக்களுக்கு மோட்சப்பாதை திறக்கப்படுகிறது என்பதை மறந்து விடலாமா? பலர் வாழ சிலர் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! - தேவாலயம், கொடிக்கால் நகரில் அமைந்தே தீர வேண்டும்! புது: மறுக்கிறேன் - மறுக்கிறேன்! குண: என்ன? - கொடிக்கால் நகரில் தேவாலயம் அமையக் கூடாது என்றா? நான்! புது: இல்லை - தேவாலயமே தேவையில்லை; என்கிறேன்
பக்கம்:மணி மகுடம்.pdf/35
தோற்றம்