கலைஞர் மு. கருணாநிதி 27 குரு: ஆ! - பச்சை நாத்திகம் படமெடுத்தாடுகிறது! -அவனை விட இவன் மோசம்! அவனாவது இடத்தை மறுத்தான்; இவன் இறைவனையே மறுக்கிறான்! புது: குருநாதரே! "இறைவன் மறுப்பு” “நாத்திகம்" என்கிற சில சொற்களை வைத்துக் கொண்டு, அறிவியக்க வாதிகளை வேட்டையாடாதீர்! கோயில் தேவையில்லை என்பது நாத்தீகம் என்று யார் சொன்னது? கூறும் கேட்போம் - மணிமகுடபுரியின் கோயில் எண்ணிக்கை எவ்வளவு? புள்ளி விவரத்தோடு கூறட்டுமா? தலைநகரத்திலே மட்டும் - ஐநூறு ஆலயங்கள்! தேசம் முழுவதும் ஆறாயிரம் ஆறாயிரம் ஆலயங்கள்! இந்த ஆலயங்கள்! இந்த ஆறாயிரம் ஆலயங்களுக்கு செலவிடப்படும் மொத்தத் தொகை அறுபது கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு! அந்த ஆலயங்களிலே - நிலமாக, அணிமணியாக, வைரக் கீரிடங்களாக முடங்கிக் கிடக்கும் பணம் எவ்வளவு - முன்னூறு கோடி ரூபாய் குருநாதரே! முன்னூறு கோடி ரூபாய்! பாலின்றித் தவிக்கும் பாலகர்க்குப் பலனில்லாமல் வேலையின்றி வாடும் வாலிபர்க்கும் பலனில்லாமல் - எலும்பாய்த் தேய்ந்து, எறும்பாய் உழைத்து, இரும்பால் உள்ளங் கொண்ட சீமான்களிடம் சித்திரவதைப்படும் ஜீவன்களுக்கு உபயோகமில்லா மல் - தேர்களாய் தேவாலயக் கோபுரங்களாய் வெள்ளிக் கலசங்களாய், மேடிட்டுக் கிடக்கும் முன்னூறு கோடி ரூபாய்! மணிமகுடபுரியின் பொக்கிஷத்திலும் இல்லாத பணம்! இது போதாதென்று, இன்னும் ஒரு கோயிலா? - யார் கேட்டது? - யாருக்குத் தேவை புதிய கோயில்? குரு:ஆண்டவனே கேட்டார்! புது: ஆறாயிரம் கோயில் போதாதென்றா? குரு: ஆமாம்! புது:ஆயிரம் வீடுகளை அழித்துவிட்டு, தனக்கு ஒரு கோயில் கேட்டாரா?
பக்கம்:மணி மகுடம்.pdf/36
Appearance