உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் புகழே! நீ ஒரு கணிகை கால் கடுக்க உன்னைத் தேடி அலைபவர்களிடம் காசு பெற்று காதல் வழங்குகிறாய். புகழே! நீ ஒரு சந்திரமண்டலம். உன்னை அடையும் முயற்சியில் பல மேதை கள் இன்னும் வெற்றி பெற முடிய வில்லை. புகழே ! நீ இமயத்தின் உச்சி. இடை விடா முயற்சியால் உன்னைச் சிலர் பிடித்து விடுவார்கள். புகழே! நீ ஒரு பனிக்கட்டி. உன்னைக் கைக்குள்ளேயே வைத்துக் கெட்டி யாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய். புகழே! நீ ஒரு மதுக்கலயம் உன்பால் வீழ்ந்த ஈக்கள் எழுந்ததேயில்லை. புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப் படாதவர்களைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாய். புகழே! நீ ஒரு புதிர்! உன்னைப் பற்றி விளக்கவே என்னால் முடியாது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/13&oldid=1706687" இலிருந்து மீள்விக்கப்பட்டது