உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்புப் பெண் வா. இரவே வா! எழிலாடும் கருப்புப் பெண்ணே வா ! நீ அழகி - பேரழகி. கருப் புப் பெண்ணை நான் விரும்புகிறேன். நேசிக்கிறேன். ஆனால் எனக்குக் கல்யாண மாகி விட்டதே ! அதனால் என்ன; களங்க மற்ற உள்ளத்தோடு உன் அழகை வர்ணிப் பது குற்றமா என்ன. மரகத மங்கையே ! காரிருள் காதலியே' என்று உன்னைக் கூப்பிட்டால் கடிந்துகொள்; நியாயம். தோழியே என்று அழைப்பதில் தோஷ மில்லை யென்று நானே முடிவுகட்டிவிட் டேன். £ இரவுப் பெண்ணே! இப்படி வா! உட் கார்! உட்கார்ந்தாயா, சரி மகிழ்ச்சி! கருப்புப் பெண்ணை நான் விரும்புகிறேன். காரணம் தெரியுமா? கருப்புப் பெண் சிரித்தால்தான் முத்துப் பற்களுக்கு முத லிடம் கிடைக்கிறது. பெண்ணின் அழகே கண்ணில்தானே. கருப்பு மேனியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/14&oldid=1706688" இலிருந்து மீள்விக்கப்பட்டது