உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தாரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[14] வெள்ளை விழி. ஆகா, என்ன கவர்ச்சி! என்ன கவர்ச்சி ! நீயும் கருப்பாயிருந்து சிரிப்பதால் தான் உன் நட்சத்திரப் பற்களின் வைர ஒளியை வையம் புகழ்கிறது. நீ சிரிக் கிறாய்; ஆயிரம் முத்துக்களை அடக்கி வைத்துள்ள சிப்பியைப் பிளந்ததுபோல் இருக்கிறது உன் வாய். பெண்ணே! உன் இருதயத்தின் படபடக்கும் ஒலிகூட என் காதில் விழுகிறது. அவ்வளவு அமைதியா யிருக்கிறாய் நீ. நீ அமைதி அலங்காரி. ஆனாலும் உன் இருதயம் சாந்தியற்றது. சஞ்சலம் நிறைந்தது. அதன் துடிப்பை உணருகிறேன் நான். உனக்கு ஒரு காத வன் வேண்டும். கள்வர்கள் உன்னைக் காதலிக்கிறார்கள். நீ வெறுக்கிறாய். வேத னைப்படுகிறாய். குடியர்கள் உன் மடியைத் தேடி அலைகிறார்கள். நீயோ குமுறுகிறாய். அதையும் உன் இருதயம் சொல்லத் தவற வில்லை. கனி குலுங்கும் சோலைகளில், காவிரியின் கரைகளில், கட்டித் தழுவும் காதலர்களின் சரச உரையாடல்களைக் கேட்டுக் கேட்டுத் தினவெடுத்த உன் இருதயம் கனத்துப்போய்க் கிடக்கிறது. நீ சிரிக்கிறாய், வெளி உலகுக்கு! ஆனால் உன் இருதயம் அழுவதை என்னால் உணர முடிகிறது. காதலுக்கேற்ற கட்டழகனே கிடையாதா என ஏங்குகிறாய். நானோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தாரம்.pdf/15&oldid=1706689" இலிருந்து மீள்விக்கப்பட்டது