உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி இயற்கையோடு எய்த அம்பு ஓரியின் அம்பு. அம்பு இயற்கைக்கு முரண்பட்ட அம்பாக ராமனின் சித்தரிக்கப்படுகிறது. இதை நான் அன்றைக்கு எடுத்துக் காட்டினேன். வை அரசர்கள் புலவர்களாக இருந்து நாட்டு மக்களுக்குத் தேவையானதைச் சொன்னார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே எப்படியாவது படிக்க வேண்டும், உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாமு கற்றல் நன்றே என்று கூறிய பாண்டியன் மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய மன்னன், கீழானவன் என்று கூறப்படுகின்றவன் படித்து விடுவானேயானால் அவன் மேலே இருப்பவனை வெல்வான் என்று எழுதியிருக்கிறான். புலவர்களுக்கும் அரசனாக அவன் வீற்றிருந்தான். அரசன் கோப்பெருஞ்சோழன் பாடிய பாடலில் குறிப்பிடுகிறான்: அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து 35 பொருள் வயிற் பிரிவோர் உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக மடலம் ஆக நாமே பொருளுக்காக, பணத்துக்காக, செல்வத்துக்காக, ஏதோவொரு இலாபத்திற்காக அன்பையும் அருளையும் பாசத்தையும்