உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அறிவொளி ஒளவை நல்லாள். காலைக் கதிரவன் போல் கை சிவக்க கொடை வழங்கும் காவலர்கள் வாழ்ந்திருந்த தமிழ்நாடு! ஓலை கொண்டொருவன் போர் என்று வந்துவிட்டால் மாலை சூடுகின்ற வேளையென்றும் பாராமல் தோளைத் தொத்துகின்ற பெண்கிளியைப் புறம் விடுத்து, வாளைக் கூரேற்றி வான் நோக்கி நிமிர்கின்ற வீரமறவர்களின் தாய்வீடு பாலை, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதமென்று நிலம் வகுத்து வாழ்கின்ற தமிழரிடை சோலைப் பூவினம் போல் தமிழ்க் கவிதை மலரவைத்தாள். தாயகத்துக் கற்புநிறை பிறழாத காதல் சொன்னாள் - களம் சென்றார் வீரம் சொன்னாள். களத்தில், சாதல் இன்னே வரட்டுமென்று சென்றுவிட்ட தலைமகனும் சந்தனத்து கட்டை போல மணக்கட்டும் இலக்கியத்தில் எனக்கூறிப் பாதம்முதல் உச்சிவரை குளிர்கின்ற தாய்க்குலத்தை எண்ணியெண்ணிப் பெருமை கொண்டாள், தன் பூவடிகள் புல்மீது அழுந்தியதால் பனித்துளிகள் அழிந்துவிடும். போரடியில் நெல்மணி போல் பகைவர்களின் சிரம் வீழும்