V
பதிப்புரை مے خasvaےہ
ராஜா எம். தினகர் சேதுபதி, பைந்தமிழ்க் காவலர் பாஸ்கர சேதுபதியின் உடன் பிறப்பு. இவர் ஒரு பன்மொழிப் புலவர். பல்கலைச் செல்வர். பண்பாடு மிக்கவர். தமிழகம் அளாவிய சேது மன்னர் குடிப்பெருமையை மடல் அவிழ்ந்த மனோரஞ்சித மலராக மணம் வீசச் செய்தவர்.
காலப் புழுதியில் படிந்து மறைந்து விட்ட இவரது இசைப்புலமை இலக்கியத்திறன், கலை உள்ளம், நூலறிவு, அன்பு நெஞ்சம், கொடை உணர்வு ஆகியவை அனைத்தும் இன்று மட்டுமல்லாமல், நாளைய தலைமுறையினருக்கும் நம்பிக்கை ஒளி ஊட்டுவன.
இத்தகைய சிறந்த சேது நாட்டுச் செம்மலைப் பற்றி சேது நாட்டு வரலாற்று ஆசிரியரும் தமிழ் மாமணியுமான டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் வரைந்து இருப்பது மிகவும் பொருத்தமான பயனுள்ள பணியாகும்.
அவரது இந்த எழுத்தோவியத்தை, எங்களது வெளியீடாக தமிழக வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
நாள் : 26.09.1999 சர்மிளா பதிப்பகம்
இராமநாதபுரம்.