உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. அந்த வாலிபர்களின் கட்டாரி சில பன்றிகளின் வயிற்றில் பாய்ந்தன! சில பன்றிகளின் கழுத்தில் பாய்ந்தன! சில பன்றிகளை அவர்கள் கரும்பாறை களைத் தூக்குவது போலத் தூக்கி தரையில் ஓங்கி அடித்து. அவற்றின் உடல்களை வீசியெறிந்தனர்! ஒன்றிரண்டு பன்றிகள் தப்பித்தோம் பிழைத்தோமென்று தலைதெறிக்க ஓடி விடவே, வாலிபர்கள் மூவரும் ஒருவர் தோளைப் பிடித்து ஒருவர் குலுக்கிப் பாராட்டு தெரிவித்துக் கொண்டு; உடலில் படிந்துள்ள மண்ணைக் கழுவுவதற்காக; அங்கு, சற்று தொலைவிலிருந்த பெரிய கிணற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

மாயவர், குதிரையை அவர்கள் நடந்து செல்லும் திசையில் முடுக்கி விட்டார். குதிரையில் யாரோ வருவது கண்டு வாலி பர்கள் மூவரும் நின்றனர். அவர்களைப் பார்த்து மாயவர். தம்பிகளா! இந்த ஊரில் 'ராக்கியண்ணன் பயிற்சிப்பாசறை எங்கே இருக்கிறது?" என்று கேட்கவே-வாலிபர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். விழிகளை அகல விரித்தனர். மூவரில் ஒருவன் மட்டும் முன்வந்து; இதோ இந்தப்பக்கம் நேராகப்போனால்... அந்தப் பாசறை போய்ச் சேரலாம்!" என்றான். மிகவும் நன்றி தம்பி! பன்றிகளோடு நீங்கள் நடத்திய யுத் தத்தைக் கண்டு களித்தேன். உங்கள் வீரத்தைப் பாராட்டு கிறேன்.' BB என்று மாயவர் புன்னகை இழையோடக் கூறினார். அவரை ஒரு முறை ஏற இறங்கப்பார்த்து விட்டு மூன்று வாலிபர்களும் ஒருவருக்கொருவர் ஏதோ கண் ஜாடை காட்டிக் கொண்டனர். பின்னர். அவரிடம் சொல்லிக் கொள்ளாமலே கிணற்றை நோக்கி மீண்டும் நடந்தனர். மாயவர், அவர்களைப் பாசமிகு பார்வையால் ரசித்துக்கொண்டே. அடடா! இந்த வீர வாலி பர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட் டோமே! என்றெண்ணியவராக அந்த வாலிபர்கள் நடக்கும் திசை நோக்கியே குதிரையில் சென்றார். "தம்பிகளே! உங்கள் பெயர்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?" மாய வரின் இந்தக் கேள்விக்கு மூன்று வாலிபர்களும் விடையளிக் காமல் நின்றார்கள். "சொல்லமாட்டீர்களா?" மாயவர் மீண் டும் கேட்டார். மூவரும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த் துக் கொண்டனர்!

49