உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி தன என்றாலும்; என்னுடைய எண்ணமெல்லாம் தமிழ்நாட் டையே சுற்றிக் கொண்டிருந்தது. அதிலும் தலையூர்க்காளி யைப் பற்றியே எனக்கு மிகக் கவலை. அவனைத் தனியே விடுத்து இருபத்தி ஐந்து வருஷம் கழித்து விட்டோமே; அவன் தந்தை இறந்தபோது நம் கையில்தானே அவனை ஒப்படைத்து விட்டுத் துணையாக இருக்குமாறு சொல்லிவிட்டுப் போனார் அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டோமே என்ற கவலை வேறு என்னைக் கப்பிக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் பிறந்த மண்ணின் மீதுள்ள பற்று என்னைப் பற் றிக் கொண்டு திரும்ப இழுத்து வந்து விட்டது. $ 3 மாயவரின் பதில், ராக்கியண்ணன் மனத்தில் மிக உருக்கமா கப் பதிந்தது. 'அவ்வளவு பற்றும் பாசமும் கொண்ட தலையூர் மண் ணைப் பிரிந்து செல்ல வேண்டிய அளவுக்குத் தங்கள் நெஞ் சில் ஏற்பட்ட புண்தான் என்னவோ? காலத்தால் அந்தப் புண் ஆறியிருக்குமென்று கருதுகிறேன். சரியென்று பட்டால் நானும் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக் கலாம் அல்லவா?' .. "உற்ற தோழரான உம்மிடம் உரைக்காமல் கூட அன்றைக்கு ஊரை விட்டுப் போய் விட்டேன். அதற்குப் பிராயச்சித்தமாக அந்தக் காரணத்தை இப்போது உம்மிடம் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. "என்னிடம் விடைபெற்றுச் செல்ல அப்போது வந்திருந் தால் ஒரு வேளை நான் தடை செய்து விடுவேன் எனத் தயங் கியிருப்பீர்கள்.எப்படியோ நடந்தது நடந்து விட்டது - இனி மேல் நடப்பவைகளாவது நல்லவைகளாக நடக்கத் தங்களின் அறிவும் ஆற்றலும் தூய்மையான இதயமும் பயன்படட்டும். .. ராக்கியண்ணரே! தாங்கள் நல்லதை நினைக்கிறீர்கள். ஆனால் இன்னமும் எனக்குத் தலையூர் மாளிகையில் அந்த நம்பிக்கை பிறக்கவில்லை!' 44 அப்படியா? ஏன் மாயவரே; எதனால் இவ்வாறு சொல் லுகிறீர்கள்? .. "இப்போதும் தலையூர்க்காளிக்கு அவனது அருமைப் புர வலர் செல்லாத்தாக் கவுண்டரின் முகஸ்துதிப் பேச்சில் தானே 55